15199 இந்திய-இலங்கை உறவுகளின் இரண்டக நிலை.

ஷெல்டன் யூ. கொடிக்கார (தொகுப்பாசிரியர்), நா.செல்வக்குமாரன் (தமிழாக்கம்). கொழும்பு: அனைத்துலக ஆய்வுக்கான பண்டாரநாயக்க நிலையம், S.W.R.D.பண்டாரநாயக்க தேசிய நினைவு மன்றம், 1வது பதிப்பு, 1990. (கல்லச்சுப் பிரதி).

(10), 213 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 28.5×21 சமீ., ISBN: 955-9147-08-0.

1990 ஜனவரியில் கொழும்பு, சர்வதேசக் கற்கைக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் அனுசரணையில் நடாத்தப்பட்ட இந்திய-இலங்கை தொடர்புகள் பற்றிய ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளையும் அதில் இடம்பெற்ற கலந்துரையாடலையும் இந்நூல் உள்ளடக்குகின்றது. ஆரம்ப உரை (சிறிமா ஆர்.டீ.பண்டாரநாயக்க), பிரதான உரை: இந்திய-இலங்கை உறவுகளின் புவித்திறமுறை நோக்கு (ஷெல்டன் யூ. கொடிக்கார), தற்காலத்துக்கு முன்னைய காலங்களில் தெற்காசியப் பிரதான நாடுகளுடன் இலங்கை கொண்டிருந்த உறவு பற்றிய ஒரு நோக்கு (சேனக்க பண்டாரநாயக்க), தென்னாசியாவும் சர்வதேச மாற்றமும் (பாபானி சென் குப்தா), இனப்பிரச்சினையும் இந்திய-இலங்கைச் சமாதான வழிமுறையும்: 1983 ஜ{லை-1987 ஜ{லை (ஸ்ரான்லி ஜயவீர), காந்தி-ஜயவர்த்தனா சமாதான உடன்படிக்கையும் அதன் பின்னரான இந்திய-இலங்கை உறவின் போக்கும் (எஸ்.டி.முனி), இந்திய-இலங்கை உறவுகளில் தமிழ்நாட்டின் பங்கு (இசத் ஹ{சைன்), இலங்கைச் சமூகத்துள் நாடற்றவர்களின் ஒன்றிணைப்பு (பேற்றம் பஸ்தியாம்பிள்ளை), இந்திய-இலங்கைப் பொருளாதாரக் கூட்டுறவு (சு.யு.ஆ.ஊ.வணிகரட்ன), இந்திய-இலங்கை உறவுகளில் செய்தித் துறையின் பங்களிப்பு (சிங்ஹ ரட்ணதுங்க), இந்திய-இலங்கை உறவுகள்: எதிர்கால நோக்குகள் (ஜோர்ஜ் வர்கீஸ்) ஆகிய 11 ஆய்வுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48480).

ஏனைய பதிவுகள்

Da Vinci Diamonds Position 2024

Articles Gambling establishment Guru What’s Very Unique About the Da Vinci Expensive diamonds Gambling enterprise Game? Mobile: Use The new Carry on Mobile Come back