வே.கருணாகரன். யாழ்ப்பாணம்: வேலாயுதம் கருணாகரன், 215 மு, நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஜீலை 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முத்திரைச் சந்தி, நல்லூர்).
viii, 120 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ.
பரீட்சை நுட்பங்கள், அறிவுறுத்தல்கள், குறிப்புகள் கொண்ட இரு அலகுகள் அடங்கியுள்ள இந்நூலின் 5ஆம் அலகில் பேரினப் பொருளாதார நோக்கங்கள்-பிரச்சினைகள்-கொள்கைகள், தேசியக் கணக்கீட்டு முறைகள், உற்பத்தி அணுகுமுறை-பல்கணிப்பீட்டுப் பிரச்சினைகள், உற்பத்திமுறைக் கணிப்பீடு-எண்ணக்கருக்கள், வருமானமுறைக் கணிப்பீடு-எண்ணக்கருக்கள், செலவுமுறைக் கணிப்பீடு-எண்ணக்கருக்கள், தேசிய கணக்கீட்டின் முக்கியத்துவம்-அதன் வரையறைகள் (பசுமைத் தேசியக் கணக்கு) ஆகிய பாடங்களும், 6ஆம் அலகில் பேரினப் பொருளாதார சமநிலை, மொத்தச் செலவின்/கேள்வியின் கூறுகள், பேரினப் பொருளாதார சமநிலை நிர்ணயம், பேரினப் பொருளாதார சமநிலை மாற்றம் ஆகிய பாடங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளதுடன் பயிற்சி வினாக்களும் விடைகளும் இறுதியில் தரப்பட்டுள்ளன.