15206 நிலமானியம் : ஆசியாவினதும் இலங்கையினதும் சமூக உருவாக்கம் பற்றிய ஆய்வு.

சேனக பண்டாரநாயக்க (மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 59 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-614-4.

மறைந்த தொல்லியல்துறைப் பேராசிரியர் சேனக பண்டாரநாயக்க (1938-2015) எழுதியதும் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டதுமான Continuities and Transformations: Studies in Sri Lankan Archaeology and History என்னும் பெயரில் 2012இல் வெளிவந்த நூலில் இடம்பெற்றிருந்த Feudalism Revisited: Problems in the Characterisation of Historical Societies in Asia the Sri Lankan Configuration என்ற ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கமே இதுவாகும். முன்னுரை/ நிலமானியம்-ஆசியாவினதும் இலங்கையினதும் சமூக உருவாக்கம் பற்றிய ஆய்வு/ ஆசியாவின் வரலாற்றுக் கால சமூகங்கள்/ இலங்கையின் சமூக உருவாக்கம்-ஐந்து நோக்கு முறைகள் (அனுபவ நோக்கிலான ஆய்வுகள், முடியாட்சிச் சமூகம் என்ற கருத்து, ஆசிய உற்பத்தி முறை என்ற எண்ணக்கரு, நில மானியம், பலநோக்க முறைகளின் கலப்பு)/ இலங்கையும் நிலமானிய உற்பத்திமுறையும்/ ஆசிய சமூகங்களில் அரசியல் அதிகாரம் மத்தியப்படுத்தல்/  நிலமானிய வகையும் உபவகையும் ஆகிய தலைப்புகளின் வழியாக இவ்வாய்வு விரிகின்றது. பின்னிணைப்புகளாக சோழர்கால அரசு அமைப்பின் அடிப்படை இயல்புகள், நவீனத்துக்கு முந்திய காலத்து அரசு உருவாக்கம் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.    

ஏனைய பதிவுகள்

Mega Moolah Slot Remark

Posts On which Webpages Should i Enjoy Mega Moolah Out of India? | king billy casino welcome bonus Ideas on how to Enjoy Super Moolah