15207 வாசகர் செயல் வட்டங்கள்: இலகுபடுத்துனர் கையேடு.

விழுது. கொழும்பு 7: விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம், இல.3, டொறிங்டன் அவெனியு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி).

vi, 39 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ.

வாசகர் செயல் வட்டங்கள் என்பன ஒரு சமூகம் கூட்டாக தனது பிரச்சினைகளைத் தீர்க்க விழையும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இவ்வட்டங்களில் கலந்து கொள்பவர்கள் தாம் அக்கறைப்படும் ஒரு விடயத்தைப் பற்றி ஒருவரோடொருவர் முகம் பார்த்து நேருக்கு நேராக கலந்துரையாடுகின்றனர். இந்தக் கலந்துரையாடல்கள் தமது நாட்டை எதிர்நோக்கியுள்ள சிக்கலான பிரச்சினைகளுக்கு சாதாரண மக்கள் தமது ஆழ்ந்த அனுபவ அறிவைக் கொண்டு தீர்வுகள் தேடும் வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றன. இக்கையேட்டின் முதல் பாகத்தில் வாசகர் செயல் வட்டங்கள் என்றால் என்ன என்பதும் பரந்த மட்டங்களில் ஏராளமான வட்டங்கள் அமைக்க வேண்டியதன் தேவையும் விளக்கப்பட்டிருக்கின்றது. அடுத்த பாகத்தில் இலகு படுத்துநரின் கடமைகளும் அவருக்கு இருக்கவேண்டிய குணாதிசயங்களும் கூறப்பட்டிருக்கின்றன. மூன்றாவது பாகத்தில் வாசகர் செயல் வட்டங்களை உருவாக்கும் முறைகள் சில விவரிக்கப்பட்டுள்ளன. பயிற்சியொன்றும் இல்லாமலும் கூட வாசகர் செயல்வட்டங்களை உருவாக்கி அவற்றிற்கு நல்ல இலகுபடுத்துனராக இயங்கக்கூடிய முறையில் சகல வழிமுறைகளையும் இக்கையேட்டில் உள்ளடக்கியிருக்கிறார்கள்.

ஏனைய பதிவுகள்

Rizk Casino Bericht & Maklercourtage

Content Kundenservice Within Rizk: 200 Prozent Casino -Bonus Good Bonuses But Slow Existiert Sera Rizk Coupon Codes Für jedes Bestandskunden? Need A Decent Provision ?