15209 இடதுசாரி இயக்கமும் 56 கிளர்ச்சியும்.

காமினி வியன்கொட. கொழும்பு 5: சகவாழ்வு மன்றம், 37/35, புல்லர்ஸ் லேன், 1வது பதிப்பு, 2008. (மகரகம: ராவய வெளியீட்டகம், 83, பிலியந்தல வீதி).

48 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×14 சமீ., ISBN: 978-955-1468-29-3.

இந்நூலில் ”இடதுசாரி இயக்கம்” என்ற முதலாவது பிரிவில் உலகப் பொருளாதார வீழ்ச்சிநிலை, சூரியகாந்தி இயக்கம், மலேரியா தொற்றுநோய், சமசமாஜவின் நோக்கம், பிரஸ்கேடில் சம்பவம், ட்ரொஸ்கிவாத அழுத்தங்கள், சமசமாஜ கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு, ஒரே கல்லில் இரு மாங்காய்கள், ஹர்த்தால், டட்லி இராஜினாமா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சவால், கூட்டரசியல், இனம் மற்றும் மதத்தினை முக்கியப்படுத்திக்கொள்ளல் ஆகிய அத்தியாயங்களில் இடதுசாரி இயக்கம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் பதிவாகியுள்ளன. “1956- தற்கால  நெருக்கடியின் முக்கிய காலப்பகுதி” என்ற இரண்டாவது பிரிவில் சிங்கள மகாசபை, ஸ்ரீலங்கா கட்சியினை ஸ்தாபித்தல், ஆங்கிலேயரின் கீழ் நாடு ஒன்றுபடுதல், வளங்களுக்கான நடுத்தர வர்க்கத்தின் போராட்டம், பண்டாரநாயக்க அதிகாரத்திற்கு வருதல், மொழி முக்கிய இடத்தினைப் பெறுதல், பண்டாரநாயக்கவின் மொழிக் கொள்கை, சிங்களக் கட்சிகள் இரண்டும் -“சிங்கள மட்டுமே”, மீண்டும் தனிச் சிங்கள அமைச்சரவை, தமிழ் சத்தியாக்கிரகத்தின் மீதான தாக்குதல், சமஷ்டி கோரிக்கை, பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், ஸ்ரீ எழுத்து, ஒப்பந்தத்தினைக் கிழித்தெறிதல், இனக் கலவரங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் இனப்பிரச்சினை கூர்மையடைந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

10 Beste Neue Verbunden Spielsaal Spiele 2024

Content Beste Neue Online Spielsaal Spiele 2024 Prämie Die Online Slots Substituieren Die Beliebten Novomatic Titel? Automatenspiele Sachverzeichnis Black Lagoon Spielautomat In 30 Linien Erreichbar