15216 இலங்கையின் இனத்துவ முரண்பாட்டின் பின்புலத்தில் அபிவிருத்தி, அரசியல், வெளிநாட்டுதவிகள்.

ரோஸ் மலிக், செரனா தென்னக்கோன், (ஆங்கில மூலம்), சா.திருவேணிசங்கமம் (தமிழாக்கம்). திருக்கோணமலை: சமூக அபிவிருத்தி நிறுவனம், SDRO, 90, வித்தியாலயம் வீதி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3, ரம்யா பிளேஸ்).

vi, 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

கனடாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் ஒரு சுதந்திரமான அபிவிருத்தி ஆலோசகரான ரோஸ் மலிக் எழுதிய ”இலங்கையின் இனமுரண்பாடுகளை தீவிரமாக்கியதில் வெளிநாட்டு உதவிகளின் பங்கு” என்ற கட்டுரையும், புரட்சிகர சிந்தனை கொண்ட பெண்களை அணிதிரட்டி இனவேறுபாடு, பெருந்தேசியவாதம் என்பனவற்றுக்கெதிராக பல போராட்டங்களைச் செய்த பெண்ணிய மானிடவியலாளரான செரனா தென்னக்கோன் எழுதிய ‘சடங்குகளின் மீள்எழுச்சி: இலங்கையின் துரிதப்படுத்தப்பட்ட மகாவெலித் திட்டம்” என்ற கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கலாநிதி ரோஸ் மலிக் கனடாவின் சுதேசி சபையில்  ஆராய்ச்சி இயக்குநராகவும் சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கான கனடிய நிறுவனத்தில் ஆராய்ச்சி உறுப்பினராகவும் கனடா அரசாங்கத்தின் வெளிநாட்டு அலுவல்கள், சர்வதேச வர்த்தகம் என்பனவற்றுக்கான திணைக்களத்திலும் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திலும் ஆலோசகராகவும் பணியாற்றுகின்றார். செரனா தென்னக்கோன் தனது 32 வயதில் (1998) அகால மரணத்தைத் தழுவிக்கொண்டார்.

ஏனைய பதிவுகள்

Phone

Content No deposit casino William Hill – Check Out Our Favorite Pay Bonus Exclusions At Pay By Phone Casinos Recommendations Of The Day For Slots