15217 இலங்கையின் பொருளாதார அபிவிருத்திப் போக்குகள்.

மு.சின்னத்தம்பி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xi, 139 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-659-576-5.

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் பொருளாதாரம்: ஒரு சிறு கண்ணோட்டம், தாராளமயமாக்கமும் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும், இறைக்கொள்கையும் இலங்கையில் அதன் செயற்பாடும், இலங்கையினது வெளிநாட்டு வர்த்தகத்தின் கட்டமைப்பும் அதன் போக்குகளும், இலங்கையில் வெளிநாட்டுக் கடன்கள், இலங்கையின் ஊழியச் சந்தை, இலங்கைக்கு வெளிநாட்டு நிதிகளின் உட்பாய்ச்சல்: நேரடி முதலீடுகளும் வெளிநாட்டு உதவியும், பூகோளமயமாக்கம் கருத்தும் பரிமாணங்களும் அதனாலேற்படும் விளைவுகளும், பூகோளமயமாக்கமும் அபிவிருத்தியும், பூகோளமயமாக்கமும் தொழிற்சங்க இயக்கமும், அபிவிருத்தியின் வேறுபட்ட பரிமாணங்கள், சமூகநலன் சேவைகளின் வளங்களும் ஊழியத்தினது உற்பத்தித் திறனும்: இலங்கையின் தேயிலைத் தொழில் ஆகிய 12 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. மு.சின்னத்தம்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தின் பொருளியல்துறையில் இளங்கலைமாணி சிறப்புப் பட்டத்தினையும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுகலைமாணி பட்டத்தையும் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறையில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

2022 Hong-kong Sevens Chance

Blogs Asian handicap soccer betting explained – Do you know the Benefits of To try out At the Sports betting Sites Inside Hong-kong? Play Because