15218 இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் 2020.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2020. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

viii, 188 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 300., அளவு: 28×22 சமீ., ISBN: 978-955-575-404-0.

இலங்கை மற்றும் அதன் அயல்நாடுகளுடன் தொடர்பான பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்களை உள்ளடக்கிய தகவல்களை தனியொரு ”மூலநூலாக” வழங்குகின்ற குறிக்கோளுடன் இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்நூலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றது. ”தேசிய வெளியீடு, செலவினம் மற்றும் வருமானம்”, ”பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு”, ”விலைகள், கூலிகள் மற்றும் தொழில்நிலை”, ”வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி”, ”அரச நிதி”,  ‘பணம், வட்டி வீதங்கள் மற்றும் மூலதனச் சந்தைகள்”, ‘நிதியியல் துறைச் செயலாற்றம்”, ”இலங்கை மற்றும் உலகின் பிற்பகுதிகள்” ஆகிய எட்டு பிரதான தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய தேர்ந்தெடுக்கப்பட்ட கிழக்காசிய நாடுகளினதும் சார்க் நாடுகளினதும் புள்ளிவிபரங்களும் தேவைக்கேற்ப இணைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

15816 மலையகக் கவிதைகளில் பெண்களும் சிறுவர்களும்.

ஸாதியா பௌஸர்;;. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxii, 258 பக்கம், விலை: