க.மு.தர்மராசா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: க.மு.தர்மராசா (கமுதர்), இல.2, ஹாமர்ஸ் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு).
iv, 72 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட வேளை உச்ச நீதிமன்ற முதல் அமர்வில் ஆற்றிய உரை, சட்டமுந் தமிழும் என்ற தலைப்பில் ஆய்வுரை, ”பயங்கரவாதம் என்றால் என்ன?” என்ற தலைப்பில் பத்திரிகையில் வெளியான கட்டுரை, உயர்திரு நியாயவாதி (அட்வகேற்) எஸ்.ஆர்.கனகநாயகம் அவர்களின் நூற்றாண்டு தின வைபவத்தில் ஆற்றிய உரை, ”நாம் எங்கே செல்கிறோம்?” என்ற தலைப்பில் 2008.07.24 அன்று “தினக்குரல்” பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை ஆகிய ஐந்து ஆக்கங்கள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.