15221 அட்வக்கேற் எஸ்.ஆர்.கனகநாயகம் (உருவப்பட திரைநீக்க நிகழ்வு).

க.மு.தர்மராசா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: க.மு.தர்மராசா, பிரசித்த நொத்தாரிசும் சட்ட உதவியாளரும், 1வது பதிப்பு, ஜீன் 2010. (யாழ்ப்பாணம்: யுனைற்றெற் பிறின்டர்ஸ்).

(4), 159 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.

அட்வகேற் எஸ்.ஆர்.கனகநாயகம் அவர்களின் உருவப்படத் திரைநீக்க விழா தொகுப்பும் அத்துடன் உச்ச நீதிமன்ற ஓய்வுநிலை நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நிகழ்த்திய சட்டம் மற்றும் சமயம் சார்ந்த சொற்பொழிவுகளில் சிலவும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. சமயத் தொண்டும் தமிழ்ப் பண்பாடும் பேணி, சட்ட மேதையாகவும் சமூகத் தொண்டராகவும் அரசியலாளராகவும் யாழ்ப்பாண சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவராகவுமிருந்து அளப்பரிய சேவையாற்றிய சைவத் தமிழ்ப் பேரன்பர் அமரர் எஸ்.ஆர். கனகநாயகம் அவர்களின் உருவப்படம் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க சட்ட நூலகத்தில் உச்ச நீதிமன்ற ஓய்வுநிலை நீதியரசர் மண்புமிகு க.வி.விக்னேஸ்வரன் (கவீரன்) அவர்களால் 2010ஆம் ஆண்டு யூன் மாதம் 24ஆம் திகதியன்று திரைநீக்கம் செய்யப்பட்ட நிகழ்வின்போது உச்சநீதிமன்ற ஓய்வுநிலை நீதியரசர் அவர்களாற்றிய சிறப்புரையும் ஏனைய முக்கிய சில உரைகளும் அடங்கிய திரைநீக்க விழாவின் நிகழ்ச்சித் தொகுப்பே இதுவாகும்.

ஏனைய பதிவுகள்