மரியதாஸ் ஜீட் தினேஷ் (இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரொப் வீதி, 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(30), 187 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5 சமீ.
இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 2006-07ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டு மலரின்; 42ஆவது (ஆட்சி 58, முரசு 42) இதழ், பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. அவற்றுள் ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், முரண்பாட்டுப் பகுப்பாய்வு (க.வி.விக்கினேஸ்வரன்), தீங்கியல் சட்டத்தில் கவனயீனம் எனும் கருத்தேற்பின் பரிணாம வளர்ச்சி (ஜீ.எம்.சிவபாதம்), சூழற் சட்டம் மீதான ஒரு நோக்கு (எஸ்.செல்வகுணபாலன்), அரசறிவியல் ஓர் அறிமுகம் (சி.அ.யோதிலிங்கம்), ஒருவருக்குச் சொந்தமானவொரு மிருகத்தினால் பிறிதொருவருக்கு விளைவிக்கப்படும் ஊறு அல்லது அவரின் ஆதனத்திற்கு ஏற்படுத்தப்படும் சேதம் ஆகியவற்றிற்கு ஈடுகோர சட்டரீதியான பரிகாரங்கள் உண்டா? (எஸ்.யூ.குமாரசிங்கம்), ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணி, நோக்கம், அதன் அவசியத்தன்மையும், அதற்கெதிரான விமர்சனமும் (எஸ்.ஏ.அகமட் முனாஸ்தீன்), பொது மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதில் புதிய பரிமாணத்தை வகிக்கும் பொதுமக்கள் அக்கறை வழக்காடல் -ஒரு சட்டநோக்கு (ம.யூட் டினேஷ்), திருமண முறிவுக் கோட்பாடு விவாகரத்திற்கான ஒரு அடிப்படையா? தென்னக்கோன் எதிர் தென்னக்கொன் வழக்கு ஒரு நோக்கு (எப்.மடீஹா மவூன்), சிறுவர்களின் பாதுகாப்புச் சட்ட, சமூக நோக்கு (மேனகா கேசவன்), வெவ்வேறுபட்ட ஆள்சார் சட்டங்களால் ஒருவருக்கு கிடைக்கும் சலுகைகள் மற்றவரிற்கு கிடைக்காது போதல் (என்.ரஜீவன்), பிரதிநிதித்துவமுறையின் கண்ணோட்டம் (சோபனா அசோகதாசன்), இலங்கையின் இன முரண்பாட்டிற்கு சமஷ்டிமுறையிலான தீர்வு (ந.சிவகுமார்), தனியார் சட்டங்களிடையே பெண்களின் அந்தஸ்து ஓர் ஒப்புநோக்கு (யுடித் தர்ஷிகா அரியநாயகம்), மரண தண்டனை இன்னுமொரு பழிவாங்கல் மட்டுமே (நிர்மலா மேரி வாஸ்) ஆகிய தமிழ்க் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58997).