15226 நீதிமுரசு 2013.

யோகானந்தி யோகராசா (இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, புதுக்கடை வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: Top Sign Advertising and Printing Services இல.62- A1, காலி வீதி).

(28), 276 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ., ISSN: 2279-381X

 இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 2013ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின்; 48ஆவது (ஆட்சி 64, முரசு 48) இதழ், பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், எழுத்தாணைகள்-பேராணைகள் (க.வி.விக்கினேஸ்வரன்), இலங்கையின் மாறும் வெளிவிவகாரக் கொள்கை போக்கு (எஸ்.ஐ.கீதபொன்கலன்), கந்தரோடை, தென்னாசிய சமூகங்களின் சமாதான சகவாழ்வினைப் பெற்றெடுத்த ஒரு பண்பாட்டு மையம் (செல்லையா கிருஷ்ணராசா), இந்துக் கல்வியியல் அறிவாய்வியல் (சபா.ஜெயராசா), இரத்தினமாக ஒளி வீசிய இந்துபோர்ட் இராசரத்தினம் (பத்மா சோமகாந்தன்), மூன்றாம் உலக அரசு குறித்த மர்க்சியக் கண்ணோட்டம்: ஓர் கோட்பாட்டு அறிமுகம் (ராஜரட்ணம் ருக்ஷான்), இலங்கையில் நீதித்துறைச் சுதந்திரம் (என்.சிவகுமார்), வடமாகாண பாராளுமன்ற பிரதிநிதித்துவம்: ஒரு வரலாற்று நோக்கு (மொஹமட் அஜிவடீன்), பிணைச் சட்டத்தின் மீது நியாயப்படுத்தக்கூடிய விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் (M.B.M.ரமீஸ்), சிவில் வழக்குகளில் கட்டாணையும் இடைக்காலத் தடை உத்தரவும் வகிக்கும் பங்கும் (கே.துளசிகா), இலங்கைத் தமிழ் நாவல் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு (த.அஜந்தகுமார்), வாழ்வு இருக்கும்வரை வள்ளுவம் (வதனரேகா அஜந்தகுமார்), சுருக்கமுறையற்ற விசாரணை நடைமுறைகள் (தே.ராதிகா), இடையீடற்ற உடமை (யோ.யோகானந்தி), இலங்கையின் உள்ளூராட்சி முறைமையும் அவற்றின் அதிகாரப் பரப்பும் (ஏ.ஜே.மொஹமட் நவாஸ்), கைத்தொழில் சட்டங்களின் பின்னணியும் வளர்ச்சியும் (தேவகி சண்முகலிங்கம்), அட்டோணித் தத்துவப் பத்திரத்தின் சட்டவலுத் தன்மை (ஐஸ்வர்யா சிவகுமார்), அயராத யுத்தங்களும் அழிவுறும் மனிதவளமும் (பு.கிரிசாந்தன்), தேசிய ஒருமைப்பாடும் தேசத்தின் சுபீட்சமும் (ஷிப்னா ஜிப்ரி), ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியும் யூத இனவொழிப்பும் (செல்வராஜ் குமார்), திருக்குறளில் அரசியல் (ந.மயூரா), கருக்கலைப்புச் சட்டம் தொடர்பான ஒரு கண்ணோட்டம் (செ.றொஷானி) ஆகிய தமிழ்க் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இ.ஜெயராஜ் (கெட்ட போரிடும் உலகத்தை வோரொடும் சாய்ப்போம்), மேமன்கவி (இப்பொழுதே சொல்), கலைவாதி கலீல் (நீதி தேவதை), மன்னார் அமுதன் (கோயிலும் கடவுளும் பேயோன்), நிலா லோகநாதன் (கற்புடை பாடலொன்று), பாத்திமா இர்பியா (புண்பட்ட நெஞ்சு), துவாரகன் (முதுமரத்தாய்), தரைநிலா (எங்கே?) ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57411).

ஏனைய பதிவுகள்

13003 செயல்முறை கணிப்பொறி.

கு. இராயப்பு (புனைபெயர்;: கலையார்வன்). யாழ்ப்பாணம்: நியோ கல்ச்சரல் கவுன்சில், 28/1, சென்.ஜேம்ஸ் வெஸ்ட் வீதி, 2வது பதிப்பு, ஆடி 1999, 1வது பதிப்பு, தை 1999. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).(6), 202

16352 Through the Fire Zones : Photographs of Amarathaas in Sri Lanka’s War Zones.

அமரதாஸ். சுவிட்சர்லாந்து: வைட் விஷன் ஸ்ரூடியோ (Wide Vision Studio), 1வது பதிப்பு, மே 2022. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை). 400 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ஸ்டேர்லிங் பவுண்ட் 50.00, அளவு: 22×30.5