15227 அரசியலமைப்புக் கோட்பாடும் நடைமுறையும்.

ஆதம்வாவா சர்ஜீன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 188 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-657-1.

இந்நூல் அரசியலமைப்பு பற்றிய எண்ணக்கரு, அரசியலமைப்புகளின் வகைப்பாடுகள் மற்றும் அரசியலமைப்புவாதம் ஆகியவற்றை விளக்குவதுடன் அரசியலமைப்புக்கு உட்பட்ட முன்மாதிரி அரசியல் முறைமைகளான பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இந்தியா ஆகியவற்றின் அரசியலமைப்புகளையும் அவற்றின் அரசியல் முறைமைகளையும் விரிவாக அறிமுகம்; செய்கின்றது. ‘அரசியலமைப்பு: எண்ணக்கரு மற்றும் கோட்பாட்டு விளக்கம்”, ‘அரசியலமைப்புக்கு உட்பட்ட அரசியல் முறைகள்” ஆகிய இரு பகுதிகளின்கீழ் இவை இந்நூலில் ஆறு இயல்களில் எழுதப்பட்டுள்ளன. அரசியல் விஞ்ஞானத்துறை ஆசிரியர்களுக்கும் உயர்தரக் கற்கையிலும் பல்கலைக்கழகங்களிலும் உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் அரசியல்விஞ்ஞானத்தை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கும் அடிப்படைப் பாட நூல்களில் ஒன்றாக அமையும் வகையில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் கலாநிதி ஆதம்பாவா சர்ஜ{ன் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

ஏனைய பதிவுகள்

Hellraiser Gokkast Optreden

Grootte Spelletjes Gokhal Ideal Gokhuis No Account Hellraiser Gokkas Online Noppes Anga Voor de radicaal evenzeer heffinge waarderen de panel, rappe stortingen en uitbetalingen. Als