15228 பதின்மூன்றாவது அரசியல் யாப்பு சம்பந்தமான யதார்த்தமும் சில உண்மைகளும்.

சிதம்பரம் மோகன். இராஜகிரிய: சத்தியம் வெளியீடு, 114/6, கமத்தவத்த வீதி, வெலிகட, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: ஸ்டார் அச்சகம்).

(7), 24+69 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ.

இந்நூலாசிரியர் கலாநிதி சிதம்பரம் மோகன், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் இன விவகாரங்களுக்கான செயலாளரும், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரின் (வாசுதேவ நாணயக்கார) ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஆவார். இந்நூல் தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் குறிப்பில் “இலங்கையில் ஒன்றுபட்ட ஒரு தேசமாக இலங்கைவாழ் மக்களை ஒன்றிணைக்க வேண்டிய அத்தியாவசிய தேவை அனைவருக்கும் இருக்கின்றது. சகல இன மக்களும் இதயபூர்வமாக ஒன்றிணைந்து ஒரு தேச மக்களாக ஒன்றிணைய வேண்டிய தேவையும் அதே போல் சகலருக்கும் சமமான ஜனநாயகத்தை உறுதிப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வும் அவசியமாகும். அகவே இந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை, காலனித்துவ காலத்திலிருந்து இன்றுவரை நடந்துள்ள அனைத்து செயற்பாடுகளையும் நாம் கவனிக்க வேண்டும். ஜனநாயகம் என்பதற்கான உண்மையான அர்த்தம், மக்களின் நிர்வாகம் என்பதே. அதே போல் பெரும்பான்மை மக்களின் உணர்வுகள், எண்ணக் கருத்துக்கள் சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவதாக அமைய வேண்டும். அது மட்டுமின்றி பெரும்பான்மை சிறுபான்மை மக்களிடையே உறவினை ஏற்படுத்த உண்மையுடன் செயற்படல் வேண்டும். கமராலவின் (கிராமத் தலைவனின்) மாடு அவனுக்குச் சொந்தமானது. ஆனால் மாட்டின் வால் மாட்டுக்கே சொந்தமானது. ஆகவே அதிகார பரவலாக்கத்தின் கீழ் மாகாணத்துக்கு தேவையான அரசியல் நிர்வாகம் ஆகியவற்றை நிர்வகிப்பதற்கு அந்த மக்களுக்கான ஜனநாயக உரிமை வழங்கப்படவேண்டுமென்பதே யதார்த்தமாகும்.” என்று காணப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்

Pay By Mobile Casino Sites

Content 1 Deposit Casino Bonus Pros And Cons Are Paypal Casinos Legal In The Us? The Latest Us No Deposit Casino Codes How Do Free