15229 கல்முனை மாநகரம்: உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும்.

 ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ். கல்முனை 10: ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ், கல்முனை மாநகரசபை உறுப்பினர், 120, மதரசா வீதி, 1வது பதிப்பு, 2015. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

xxxiv, 246 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-42733-0-6.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியின் தலைநகராகக் கருதப்பட்டது கல்முனை மாநகரமாகும். இன்று தென் கிழக்கின் முகவெற்றிலையாகவும் அம்பாறை மாவட்டத்தின் முதலாவது மாநகரம் என்ற பெருமையையும் கொண்டதாக இருக்கின்றது. இந்நூல் கல்முனை மாநகரம் பற்றிய பல்வேறு நிர்வாகத் தகவல்களை ஆட்சிக்காலம், நிர்வாக காலம், மாநகரினுள் காணப்படும் ஊர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் புதிய திருத்தங்கள் ஆகிய நான்கு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. “ஆட்சிக் காலம்” என்ற முதலாவது இயலில் உள்ளூராட்சி நிர்வாகமுறை, கிராம ஆட்சி முறை, சனிட்டரி போர்ட் நிருவாக முறை, லோக்கல் போர்ட், கல்முனை பட்டின சபை, கரவாகு வடக்கு கிராமசபை, கரவாகு தெற்கு கிராமசபை, கரவாகு மேற்கு கிராமசபை, மாவட்ட அபிவிருத்திச் சபை, கிராமோதய சபை, கல்முனை பிரதேச சபை, கல்முனை நகரசபை, கல்முனை மாநகரசபை ஆகிய உபபிரிவுகளின் கீழ் விளக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் காலம் என்ற இரண்டாவது இயலில் சிவில் நிருவாகம், கரவாகுப்பற்று, வன்னிமைகள் நிருவாகம், கல்முனை அவசர கச்சேரி, பிரதேச இறைவரி உத்தியோகத்தர் (DRO) நிருவாகம், உதவி அரசாங்க அதிபர் நிருவாகம், கல்முனை பிரதேச செயலகம், கல்முனை உப பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஆகிய பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ளது. மாநகரினுள் காணப்படும் ஊர்கள் என்ற இயலின் கீழ் துரைவந்தியமேடு, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, சேனைக் குடியிருப்பு, நற்பிட்டிமுனை, கல்முனை, சாய்ந்தமருது ஆகிய ஊர்கள் பற்றிய விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இறுதி இயலில் உள்ளூராட்சி மன்றங்களின் புதிய திருத்தங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60230).

ஏனைய பதிவுகள்

2024s Best Online casinos

Content Important site: S Better Sports betting Internet sites Tx: Top Colorado Sportsbooks On the web How to pick The best On-line casino Extra Now

Vulkan Las vegas Register Added bonus

Content America777 Gambling establishment No deposit Bonus Info and you may Criteria Different types of Free Spins Casinoer Uten Innskudd But if you take him