15230 பிரஜைகளின் கலந்துரையாடலுக்கான முன்னுரை.

லயனல் குருகே (மூலம்), எஸ்.சிவகுருநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 7: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (சமூகப் பங்களிப்பு நிகழ்ச்சித் திட்டப்பிரிவு), 24/2, 28ஆவது ஒழுங்கை, ஃப்ளவர் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்).

102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13 சமீ., ISBN: 978-955-4746-30-5.

பொதுமக்கள் மீதான கொள்கைகள் விமர்சன ரீதியாக திறனாய்வு செய்யப்படல் மாற்று வழிகளை இனங்காணல், அதை விரிவாக்கல் தொடர்பான ஆய்வு,  அழுத்தம் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றிற்கு மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தன்னை அர்ப்பணித்துள்ளது. அவ்வகையில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் வலுவூட்டுவதற்காக இந்நூல் பிரஜைகளுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் பிரஜைகளின் கலந்துரையாடலுக்கான முன்னுரை, பிரஜை என்பவர் யார், அரச சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு, ஒம்புட்ஸ்மன், பாராளுமன்றத் தெரிவுக் குழுக்கள், பிரதேசச் செயலகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கணக்காய்வுத் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு, நீதித் துறை சேவைகள் ஆணைக்குழு, தேர்தல் திணைக்களம், நுகர்வோர் சேவைகளுக்கான அதிகார சபை, இலங்கையின் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு,  தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு, இலங்கை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பணியகத்திற்கான கருமபீடம்,  அரசகரும மொழிகள் ஆணைக்குழு,  இலங்கைப் பிரஜைகள் தமது மனக்குறைகளை சமர்ப்பிக்கக்கூடிய நிறுவனங்கள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்