15231 பொதுத்துறை நிர்வாகம்: ஓர் அறிமுகம்.

ஆதம்வாவா சர்ஜீன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 171 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-711-0.

பொதுத்துறை நிர்வாகம் என்பது ஒரு செயற்பாடாகவும் கற்கைத் துறையாகவும் காணப்படுகின்றது. ஒரு செயற்பாடு என்ற வகையில், எந்தவொரு அரசிலும் நடந்தேறும் அரசாங்கத்தின் பணிகள் அனைத்தையும் இது குறித்து நிற்கின்றது. அவ்விவகாரங்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள பொது நிறுவனங்களையும், அந்நிறுவனங்களில் பணியாற்றும் பொதுப் பணியாளர்களின் ஒழுங்கமைப்பு மற்றும் செயற்பாடுகளையும் விஞ்ஞானபூர்வமாகக் கற்பது பொதுத்துறை நிர்வாகக் கற்கையாகக் காணப்படுகின்றது. உயர்கல்வித் துறையில் முக்கியமான ஒரு கற்கைப் பிரிவாக உள்ள பொதுத்துறை நிர்வாகம் இன்று பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் கவனத்தை ஈர்த்துவரும் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்நூல் பொதுத்துறை நிர்வாக மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பொதுத்துறை நிர்வாகத்தின் அடிப்படைகளைத் தெளிவாகவும் விபரமாகவும் விளக்குவதாக அமைந்துள்ளது. பொதுத்துறை நிர்வாகத்தின் மூலக்கூறுகள், ஒழுங்கமைப்பும் ஒழுங்கமைப்புக் கோட்பாடுகளும், பொதுத்துறை நிர்வாக எண்ணக் கருக்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் 14 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  கலாநிதி ஆதம்வாவா சர்ஜீன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70200).

ஏனைய பதிவுகள்

BigBot crew street magic bonus game slot

Content Gambling enterprises you to definitely deal with New jersey participants providing Big Robot Team: | street magic bonus game £fifty Free for new Professionals