15232 ஆகாயத் தாக்கற் பாதுகாப்பு விதி: ஏ.ஆர்.பீ. விதி.

அ.கோல்டிகற்;. இலங்கை: சிவில் பாதுகாப்பு கொமிஷன், 1வது பதிப்பு, 1942. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

v, 53 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

“இது ஒவ்வொருவரும் கைக்கொள்ளுதற்குரியது” என்ற அறிவுறுத்தலுடன் இலங்கை சிவில் பாதுகாப்புப் கொமிஷனருடைய கட்டளையின்படி வெளியிடப்பட்டது. ஆசிரியர் அ.கோல்டிகற் எழுதிய முகவுரை, கொழும்பு மேயர் ஆர்.சரவணமுத்து அவர்கள் விடுத்த செய்தி, வாசகருக்கான குறிப்பு ஆகியவற்றுடன் கூடிய இந்நூலில், விமானப் படையெடுப்பும் அதன் விளைவும், எச்சரிக்கை, வீட்டில் ஒதுக்கிடம், எரிகுண்டு, படையெடுப்பின் பின்பு செய்ய வேண்டியன, இலகுவான முதலுதவிச் சிகிச்சை, கொழும்பு ஏ.ஆர்.பி. ஸ்தாபனம், கொழும்பு ஏ.ஆர்.பி. திட்டமும் தல விபரமும் ஆகிய அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. பலவகைக் குண்டுகளும் அவற்றின் விளைவுகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. விமானப் படையெடுப்பு ஒன்று நிகழும் வேளையில் எதை எதையெல்லாம் நாம் எதிர்பார்க்கலாம் என்றும் அவற்றுக்கான காரண காரியங்களையும், பாதுகாப்பு நடைமுறைகளையும், பாதிக்கப்பட்ட வேளையில் உதவக்கூடிய எளிய முதலுதவிச் சிகிச்சை முறைகளையும் இந்நூல் தருகின்றது.

ஏனைய பதிவுகள்

No-deposit Incentive

Posts Our very own Greatest No deposit Zero Card Info Casinos For 2024 The way to get The most significant No-deposit Incentive For as long