15234 குடும்போதயம்: குடும்ப நிதியம்-வழிகாட்டி.

க.திருநாவுக்கரசு (அமைப்பாளர்). புங்குடுதீவு: வட இலங்கை சர்வோதயம், பெருங்காடு, 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 386 மணிக்கூண்டு வீதி).

40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

இவ்வழிகாட்டியானது, சர்வோதய அமைப்பின் செயல்திட்டங்களில் ஒன்றான, அதன் 22ஆவது நிர்மாணத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட குடும்போதய நிதியம் பற்றிய விளக்கத்தை வழங்கும் நோக்கில்  வட இலங்கை சர்வோதய அமைப்பாளர் கந்தையா திருநாவுக்கரசு அவர்களால் தயாரிக்கப்பட்டது. 1985இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் இலட்சியம், நோக்கம், செயல்விதிகளை இச்சிறு கைந்நூல் உள்ளடக்குகின்றது. (இந்நூல் புங்குடுதீவு சர்வோதய மத்திய நிலைய நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

13134 இந்து ஆலயங்களின் ஆன்மீக அனுபவங்கள்.

கனகசபை கதிர்காமநாதன். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). x,

10662 யோசுவா.

இன்பராஜன் (மூலம்), என்.எம்.சவேரி (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நாடகப் பிரதியாக்கப்பகுதி, திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13:  கீதா பப்ளிக்கேஷன்ஸ்). 40 பக்கம், சித்திரம், விலை: