15238 உலக சூழல் தினம் (சிறப்புக் கட்டுரைகள்).

காசுபதி நடராசா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட சூழல் முகவரவை, இணை வெளியீடு, மன்று நிறுவனம், 1வது பதிப்பு, ஜ{ன் 1992. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்).

vi, 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ.

சுற்றுச்சூழல் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வூட்டும் கட்டுரைகள். மட்டக்களப்பு மாவட்ட சூழல் முகவர் நிலையம், மன்று + சூழல், இன்று நமது பிரச்சினை, சூழல் மாசுபடுதல், சுற்றாடல் நெருக்கடி, சூழலும் அபிவிருத்தி நிர்வாகமும், சூழலும் சுகநலமும், சூழலும் இரசாயனப் பாவனையும், சூழலும் கால்நடைகளும் காட்டு விலங்குகளும், சூழலும் தமிழ் இலக்கியங்களும், சூழலும்  வனத் திணைக்களமும், மட்டக்களப்பின் சில தாவர சாகியங்கள் பற்றி, மட்டக்களப்பு மாவட்ட நீர் விநியோகத் திட்டம், கொறளைப்பற்று பிரதேசத்தில் முனைப்படைந்துள்ள சூழற் பிரச்சினைகள், சூழல் அபிவிருத்தியில் தென்னை, சூழல் அபிவிருத்தியில் மரமுந்திரிகை, சூழல் அபிவிருத்தியில் பனை வளம், வீதியோர மரம் நடுகை, மட்டக்களப்பு வாவி மக்களும் அபிவிருத்தியும், சூழலைப் பேணுவோம், சூழல் பாதுகாப்பில் மகளிர் பங்களிப்பு, சூழல் பாதுகாப்பில் கணனியின் பங்கு, 1978ஆம் ஆண்டு புயலுக்குப் பின், கண்ணாக் காடுகள் பறவைகளின் சரணாலயம், பாடசாலை சூழல் அணிகள், மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைச் சூழல் அணி ஒழுங்கமைப்பு ஆகிய 26 தலைப்புகளில் சூழல்சார்ந்த பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இறுதியில் சூழல் சார்ந்த போட்டி முடிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13305).

ஏனைய பதிவுகள்