15242 மாசுறும் பூமி.

எஸ்.பேராசிரியன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

v, (2), 70 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-0958-34-4.

சுற்றுச்சூழல் மாசடைவதால் ஏற்படும் பல்வேறு மாற்றங்களையும் அதனால் மனிதகுலம் எதிர்கொள்ளவுள்ள பேராபத்துகளையும் எச்சரிக்கையுடன் முன்னறிவிக்கும் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு இது. மாசுறும் பூமி, காலநிலை மாற்றம் பேரழிவின் ஆரம்பமா?, காலநிலை மாற்றத்தால் கடல் உணவு நஞ்சாக மாறும் ஆபத்து, வீடுகளில் காற்று மாசடைவதால் ஏற்படும் பாதிப்பு, நீர் மாசடைவதால் ஆண்டொன்றுக்கு இரண்டு மில்லியன் உயிரிழப்பு, அச்சமளிக்கும் காலநிலை மாற்றம், காலநிலை மாற்றம் குழந்தை பிறப்பு விகிதத்தைப் பாதிக்கிறது, 2050இல் அழியும் நகரங்கள், நெடுங்காலம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான இரகசியம் என்ன?, கோழி முட்டையில் நச்சு மாசுகள், ஆரோக்கிய வாழ்விற்கு சூழ்நிலை மருத்துவம், மனித இனம் பூமியை நம்பி இருக்க முடியுமா?, மனித குலத்தை அச்சுறுத்தும் விலங்கினம், மனிதன் சிறுத்தை முரண்பாடு, மனிதன் யானை முரண்பாடு, கண்டங்கள் எவ்வாறு உருவாகின, சூரியன் ஒளி இழக்கப் போகிறது, வாழவே முடியாத இடமாக இந்த பூமி மாறும், செவ்வாய் கிரகத்திற்கு குடிபெயரத் தயாராகுங்கள், செவ்வாய் கிரகத்தில் ஏலியன்ஸ், ஏலியன்ஸ் எங்களை வேவு பார்க்கிறார்களா? ஏலியன்ஸ் எங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றார்களா? ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 22 அறிவியல் கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இது 146ஆவது ஜீவநதி வெளியீடாகும்.

ஏனைய பதிவுகள்

ᐅ Habanero Pflanzen…

Content Wuchsform Das Habanero Redpflanze: Peperoni Dörren, Diskret Erklärt Unter anderem Woge Rezepte Werden Rote Chilis Messerscharf? So lange du Kontaktlinsen trägst, ist es am