15244 அதிபர், ஆசிரியர் நிர்வாக விதிக் கோவை: பாகம்: 1.

சிற்சபேச சர்மா செந்தூரன் (தொகுப்பாசிரியர்), அகிலா செந்தூரன் (உதவி ஆசிரியர்). வவுனியா: சிற்சபேச சர்மா செந்தூரன், 1வது பதிப்பு, 2016. (வவுனியா: சோபி பிரின்டர்ஸ், தோணிக்கல்).

xx, 312 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-43503-0-4.

தாபன விதிகள், சுற்று நிருப விதிகள், படிவங்கள், பதிவேடுகள், பாடசாலை நிர்வாகம் சார்ந்த விடயங்கள், பொது விடயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்நூல் அதிபர், ஆசிரியர் வினைத்திறன் மேம்பாட்டிற்கான கைந்நூலாக வெளிவந்துள்ளது. ஆசிரியர் ஒருவரின் முதல் நியமனம் தொடர்பான விபரங்கள், வலயக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய படிவங்களும் அவற்றின் விபரங்களும், வலயக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்களின் மேலதிக விளக்கங்கள், லீவு பற்றிய பொதுவான விபரங்கள், இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு, பாடசாலை விழாக்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது கவனிக்கப்படவேண்டிய சில பொதுவான விடயங்கள் என இன்னோரன்ன 40 தலைப்புகளில் பல்வேறு பயன்தரும் விடயங்களையும் இக்கைந்நூல் உள்ளடக்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்