15248 கணிதம் கடினமானதா?.

கிட்னன் கோபிந்தராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 96 பக்கம், அட்டவணைகள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-738-7.

வினைத்திறன் மிக்க வகைகளில் கணிதம் கற்பிக்கும் வழிமுறைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. கணிதம் கற்றலின் அவசியம், கணிதம் கற்பதற்கான வினைத்திறன் மிக்க சூழலை உருவாக்குதல், மாணவர்களைப் பற்றி அறிந்திருத்தல், மாணவர்களைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துதல், கற்றலில் மாணவர்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடச் செய்தல், வசதிகளை வழங்கலும் மாறுதல்களை செய்தலும், மாணவர்களின் பங்களிப்பினை ஊக்குவிக்கும் வகையில் வகுப்பறைகளை ஒழுங்குபடுத்தல், வினைத்திறன் மிக்க கற்பித்தலில் பாடத் திட்டமிடலின் முக்கியத்துவம் ஆகிய எட்டு இயல்களின் வழியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இறுதியில் பாடத் திட்டமிடல் மாதிரியும், சுட்டியும் இணைக்கப்பட்டுள்ளன. கலாநிதி கி.கோபிந்தராஜா அவர்கள் இலங்கையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் விசேட இளமாணிப் பட்டத்தையும், தென்னாபிரிக்காவிலுள்ள ருெைஎநசளவைல ழக றுவைறயவநசளசயனெஇ துழாயெநௌடிரசப பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று கணிதத்தில் முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களையும் பெற்றவர். தற்போது கனடாவில் உள்ள அல்கோமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

ஏனைய பதிவுகள்

Cellular Slots In the 2021

Posts Reels Out of Chance Rtp and you will Volatility Inside the Mega Moolah Slot Enjoy Cellular Casino For real Money The five Better Cellular