15254 பாடசாலையில் ஆலோசனை வழங்கல்.

பா.தனபாலன், ஞானசக்தி கணேசநாதன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, திருத்திய 2வது பதிப்பு, 2021, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 206 பக்கம், அட்டவணைகள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 550., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-607-6.

இலங்கையில் வடக்கு-கிழக்கு பிரதேசம் மட்டுமல்லாது எல்லாப் பிரதேசங்களிலும் மாணவர்கள் உளத் தாக்கங்களுக்கு உட்பட்டுள்ளார்கள். இதிலிருந்து இவர்களை மீட்கவும், நல்வாழ்வு வாழ வழிகாட்டவும், அவர்களின் கல்விக்குத் தடையான பிரச்சினைகளுக்குத் தீர்வகளைக் காணவும், பாடசாலைஆலோசனை வழிகாட்டல் சேவையை எல்லாப் பாடசாலைகளிலும் முழுநிறைவாகப் பிரயோகிக்க வேண்டும். இதற்கான பயிற்சிகள் பல்வேறு கட்டங்களில் பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவேண்டும். இதற்கான ஆதார நூலாகவும், பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள், ஆசிரிய கலாசாலைகள் ஆகியவற்றில் பட்டப் பின் கல்வி டிப்ளோமா, கல்வி இளமாணி, கல்வி முதுமாணிப் பாடநெறிகளைப் பின்பற்றும் ஆசிரியர்களுக்கு உதவும் நோக்கிலும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் பாடசாலையில் ஆலோசனை வழங்கல், கல்வி வழிகாட்டலும் ஆலோசனை வழங்கலும், ஆலோசனை வழங்கலுக்குப் பயன்படும் உளவியற் பிரயோகங்கள், மனித வாழ்விற்கு வழிகாட்டல் ஆகிய நான்கு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக உள-சமூக இடையீடு மற்றும் ஆலோசனை வழங்கல் தொடர்பான கல்வி அமைச்சின் சுற்று நிருபங்களும் திட்டங்களும், வடமாகாண கல்வி அமைச்சின் உள-சமூக இடையீடு மற்றும் உள-சமூக ஆதரவு வழங்கல் நிகழ்ச்சித் திட்டம், நான்கு மாதிரி வினாத்தாள்கள் (விடைகளுடன்) என்பனவும் இணைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்