எஸ்.சிவலிங்கராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xx, 220 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-712-7.
சென்ற நூற்றாண்டின் முற்பாதி யாழ்ப்பாணத்தின் கல்லூரிகள் சாதனை புரிந்த காலம். கல்லூரிகளில் ஆங்கிலமே போதனா மொழியாக இருந்ததால் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் மாணவரைப் பயிற்றுவிக்க, அக்காலத்து கல்லூரி முகாமையாளர்கள் இந்திய (பட்டதாரி) ஆசிரியர்களை நாடிப்போய் நியமித்தனர். இவ்வாசிரியர்கள், அரசு பாடசாலைகளைப் பொறுப்பேற்கும் வரை- தமிழ் போதனா மொழியாகும் வரை- கல்வி கற்பித்தனர். அவர்களுடைய உழைப்பின் -அர்ப்பணிப்பின்-பெறுபேறாக, தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் புகுந்து பொறியியலாளர்களாக, மருத்துவர்களாக, பேராசிரியர்களாக, நிர்வாகிகளாக ஈழநாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரகாசித்தனர். காலம் மறக்கவொண்ணா இவ்விந்திய ஆசிரியர்களின் பணியைப் பதிவுசெய்கிறது இந்நூல். வட மராட்சி, தென் மராட்சி, யாழ்ப்பாணம், வலிகாமம், தீவகம் ஆகிய கல்வி வலயங்களில் செயற்பட்டுவரும் 26 பாடசாலைகளில் பணியாற்றிய இந்திய ஆசிரியர்கள் பற்றி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னிணப்பாக யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட பாடசாலைகளில் பணியாற்றிய இந்திய ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியலும், அவர்கள் தொடர்பான சில புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.