நூலாக்கக் குழு. யாழ்ப்பாணம்: இளைஞர் விவகார அலகு, கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
தரம் 9இல் கல்வி பயின்றுவரும் மாணவர்கள் தரம் 10இல் தெரிவு செய்யவேண்டிய தொகுதிப் பாடங்களின் முக்கியத்துவம் பற்றிய தெளிவான உரையாடல் இக்கையேட்டில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பாடத் தெரிவும் மாணவர்களும், தொகுதிப் பாடங்கள், இருமொழி மூலம் பாரீட்சைக்குத் தோற்றுதல், பல்கலைக்கழக அனுமதிக்கு க.பொ.த. சாதாரண தரத் தேவைப்பாடுகள், கல்வி அடைவில் சமூக விழுமியப் பின்பற்றலின் செல்வாக்கு, தொழில் உலகை நோக்கி, The Beauty of Mathematics கனவு காணுங்கள், மாணவன் எப்படி இருக்கவேண்டும், டீழை னுயவயஇ பொதுப் பரீட்சைகளுக்கு எம்மைத் தயார் செய்வோம், மனித மேம்பாட்டிற்கு வித்திடும் யோகக் கலை, வீட்டுச் சூழலை கற்றற் சூழலாய் மாற்றுவோம், பாடசாலைச் சிறுமிகள் மீதான பாலியல்சார் கொடுமைகளும் சமூகத்தில் ஏற்பட்டுவரும் கலாசார முரணிலைகளும், இலங்கைப் பல்கலைக் கழகங்களினால் வழங்கப்படும் பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள், 13 வருட உத்தரவாதக் கல்விச் செயற்றிட்டம், க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையின் பின்னர், எப்படி? (மாணவர்களை நல்வழிப்படுத்தும் கருத்துக்களின் தொகுப்பு) ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகாத மாணவர்கள் உயர்கல்வியைத் தொடரும் பிற வாய்ப்புகள் பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் சுய கலாச்சார விழுமியக் கருத்துக்கள் மற்றும் மாணவர் சமுதாயத்துக்கு பயனுள்ள பல விடயங்கள் தகவல் துணுக்குகளாக இந்நூலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நூலாக்கத்திற்கு பிரதிக் கல்விப்பணிப்பாளர் நா.கந்ததாசனின் வழிகாட்டலின் கீழ் து.லெனின் அறிவழகன், சி.உதயகலா, வின்சென்ட் பற்றிக் அடிகளார், திருமதி ஜெ.ஹஸ்ரன்றோய், க.க.ஈஸ்வரன், கே.பிரவுண்சன், ஸ்ரீ நதிபரன், கா.வித்தியானந்தன், வ.யோகநாதன், திருமதி நி.சத்தியசீலா ஆகியோர் வளப் பங்களிப்பாளர்களாகச் செயற்பட்டுள்ளனர்.
மேலும் பார்க்க: கி.நடராசாவின் இலக்கியம்-கல்வியியல் கட்டுரைகள். 15805