15264 வண்மொழி 2018/2019.

ராஜரட்ணம் ருக்ஷான் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: தமிழ்ப் பட்டயக் கற்கை மாணவர்கள், கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 124 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ., ISSN: 2719-2245.

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ப் பட்டயக் கற்கைநெறியில் பயிலும் 2018/2019 ஆண்டு மாணவர்கள் வெளியிட்டுள்ள ஆண்டிதழின் முதலாவது பிரசுரம் இதுவாகும். இதில் செம்மொழி பற்றிய ஒரு குறிப்பு, Contemporary Tamil Media Scene in Sri Lanka இலக்கியமும் பரிசோதனையும், கிழக்கிலங்கையின் வரலாற்றாய்வுலகில் தடம் பதித்துள்ள க.தங்கேஸ்வரி, Attempts to Document the History of Sri Lankan Tamil Literature, ஈழத் தமிழரின் தொன்மைச் சான்றுகள், மதங்களுக்கிடையேயான மாற்றமும் புரிந்துணர்வுமே இன்றைய இலங்கைக்கு அவசியம் என்கிறார் கல்கந்தே தம்மானந்த தேரர், அறிவுக் கண்களைத் திறக்கும் நூலகங்கள், பெண்மையின் மதிநுட்பம், புதுமைப்பித்தனின் சிறுகதைகள், பத்மா சோமகாந்தனின் சிறுகதைகளில் வெளிப்படும் பெண்ணிலைவாத நோக்கு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளும், கிறிஸ்மஸ் பரிசு, கறுப்புத் தேயிலைப் பூ ஆகிய இரு சிறுகதைகளும், கல்விப் பயன், எண்ணங்களின் எதிர் ஒலி, ஏன் இந்தப் பெருமூச்சு ஆகிய மூன்று கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழ்ப் பணியாற்றிய இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்களும் அவர்களது முக்கிய படைப்புகளும், தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி மாணவர்கள் 2018/2019, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி, ஆறாவது தொகுதியினருக்கான விரிவுரையாளர்கள் ஆகிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66028).

ஏனைய பதிவுகள்

Free Video Poker And Keno Contests

Content Juegos De Poker Gratis Juegos Puerilidade Video Póker Gratis Best Freeroll Poker Sites Poker Boom Era Fan Favorite Sammy Farha Is Back And Deep