15266 சிலம்பு ஒலி 4: மேல் மாகாண கல்வித் திணைக்கள, தமிழ் இலக்கிய விழா 2018.

மலர்க் குழு. கொழும்பு 7: தமிழ்ப் பிரிவு, மேல்மாகாண கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, 2018. (கொழும்பு: வெஸ்புறோ அச்சகம்).

(2), 143 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.

‘மகுடம்” தமிழ் இலக்கிய விழாச் சிறப்பிதழாக நான்காவது ஆண்டில் மலர்ந்துள்ள இச்சிறப்பிதழில் தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ் மொழி வாழ்த்து, மேல்மாகாண தமிழ் இலக்கிய விழா வாழ்த்துப்பா, ஆசிச் செய்திகள் ஆகியவற்றைத் தொடர்ந்து இம்மலரின் ஆக்கங்கள் முத்துக்கள், மொட்டுக்கள் என இரு பிரிவாகப் பிரித்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ‘முத்துக்கள்” என்ற பிரிவில் மானிடம் என்பது புல்லோ? (வ.மகேஸ்வரன்), நல்லாசிரியன் (சி.சிவநிர்த்தானந்தா), காளிதாசரின் பரிபாடற் பரிச்சயம் (க.இரகுபரன்), சங்கப் பெண்பாற் புலவர்களும் அகத்திணைக் கவிதை மரபும் (ம.நதிரா), திரையிசைப் பாடல்களில் இலக்கியச் செழுமை (சுலோஜனா சகாதேவன்), தமிழ் மொழியின் தொன்மை (சி.ஈஸ்வரன்), அறிவுப் பிரவாகம் (துணைவியூர் கேசவன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ‘மொட்டுக்கள்” என்ற இரண்டாம் பிரிவில் புதைக்கப்பட்ட மனச்சாட்சி (கவிதை), நேரில் கண்ட தெய்வம் (குறுநாடகம்), திருக்குறளில் மனித விழுமியம் (கட்டுரை), பாலைவனத்து ரோஜா (கவிதை), சிந்திய கண்ணீர் துடைப்பவர் யாரோ (குறுநாடகம்), இணையத்தில் தமிழ் (கட்டுரை), கட்டிளமைப் பருவ மங்கை, வாசிப்பின் அவசியம், இப்படியும் மனிதர்கள், கல்விச் சுற்றுலாவும் கற்றல் நடவடிக்கையும், நன்றியுரை ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Real cash Online casino Web sites

Posts An educated Casinos To play Game For real Currency: no deposit coupons for casino Virtual Virgin Video game Finest Modern Jackpot Harbors To help