மலர்க் குழு. கொழும்பு: தமிழ்ப் பிரிவு, மேல்மாகாண கல்வித் திணைக்களம், ரண்மஹபாய, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு: வெஸ்புறோ அச்சகம்).
(24), 125 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.
“மகுடம்” தமிழ் இலக்கிய விழாச் சிறப்பிதழாக ஐந்தாவது ஆண்டில் மலர்ந்துள்ள இச்சிறப்பிதழில் தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ் மொழி வாழ்த்து, மேல்மாகாண தமிழ் இலக்கிய விழா வாழ்த்துப்பா, ஆசிச் செய்திகள் ஆகியவற்றைத் தொடர்ந்து இம்மலரின் ஆக்கங்கள் முத்துக்கள், மொட்டுக்கள் என இரு பிரிவாகப் பிரித்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. “முத்துக்கள்” என்ற பிரிவில் கற்றலுக்கான தலைமைத்துவம் (ம.கருணாநிதி), பாரதி புகழ் பரப்பிய முதற் பெண்மணி (செ.யோகராசா), பாயிரப் படைப்பில் வள்ளுவனும் கம்பனும் (க. இரகுபரன்), இக்கால ஈழத்து இலக்கியம் சாதனைகளும் சவால்களும் (ஸ்ரீ பிரசாந்தன்), ஈழத்து அரசியல் நாவல் வரிசையில் “எரிமலை” ஒரு நுண்ணாய்வு (ராஜரட்ணம் ருக்ஷான்), யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் (ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), இலக்கியங்கள் வாழ்வுக்கு வழிகாட்டிகள் (எஸ்.ஈஸ்வரன்), நன்னூலார் கண்ட ஆசிரியர் (சோமசுந்தரம் முரளி), வேரிற் பழுத்த பழம் தமிழ் சொட்டும் இனிய இரசம் (வசந்தி), சிறுவர் தினமும் இன்றைய சிறுவர்களும் (ந.மஹ்தி ஹஸன்), தமிழுலக வாழ்நாள் சாதனையாளன் (இணையம்), தமிழரின் தொன்மை வாழ்வியல் (இணையம்), தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் (பாத்திமா ஜீரைசா ஜமால்டீன்), எழுந்திடுக (ராணி சீதரன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. “மொட்டுக்கள்” என்ற இரண்டாம் பிரிவில், சூழல் மாசடைதல், தொலைக்காட்சியும் மாணவர்களும், விஞ்ஞானத்தின் விளைவுகள், தகவல் தொழில்நுட்பமும் மாணவர்களும், தர்மம் தலைகாக்கும், நம்பிக்கையே வாழ்வு, துன்பம் நேர்கையிலே, நட்பு, பேராசை, இருண்ட காலம் ஒளிர்ந்தது ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.