15269 பவளம் 1927-2005: யா/புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை பவளவிழாச் சிறப்பு மலர்.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்:  புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, புன்னாலைக்கட்டுவன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிறின்டேர்ஸ், இல. 183, பலாலி வீதி).

xvii, (16), 80 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

11.09.2005 அன்று நினைவுகூரப்பெற்ற புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் 75ஆவது ஆண்டு நிறைவுவிழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. இப்பாடசாலை 12.09.1927இல் ஆரம்பிக்கப்பட்டது. உள்நாட்டுப் போரின் காரணமாக தாமதமாக மலர் வெளிவந்துள்ளது. அதிபரின் அறிக்கை, எனது சேவைக்கால நினைவுகள், எமது கல்விப் பாரம்பரியமும் இப்பாடசாலையினது வகிபாகமும், எங்கள் பாடசாலை, அமரர் இரத்தினசோதி நினைவு அருள் ஆலயம், அமரர் க.தங்கராசா நினைவு சிறுவர் விளையாட்டு முற்றம், பாடசாலை இடவிளக்கப் படம், நூலகமும் கோயிலாகும், உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் வர்ண ஓவியங்களும் வள்ளுவர் சிலையும், புன்னாலைக்கட்டுவன் கிராமப் படம், மக்கள் சேவையில் மனநிறைவு கண்ட மாமனிதர் நா.திருநாவுக்கரசு, எங்கள் கிராமம், தொல்காப்பியக் கடல் வித்துவசிரோமணி சி.கணேசையர், பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்துவரும் கலாபூஷணம் தி.ஞானசேகரன் ஐயர் அவர்கள், மாணவர் பகுதி, ஆபத்து நோக்கிச் செல்லும் யாழ் மாவட்டக் கல்வி, நகையும் நங்கையரும், கண்கண்ட தெய்வங்கள், மாணவர் கல்வியும் பெற்றோர் ஆசிரியர் பங்களிப்பும், விந்தை செய்த விஞ்ஞானிகள், உளநெருக்கீடும் சிறுவர்களும், மாணவர் உடல் உளச் சுகாதாரம், வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான், The Importance of English, உயர்வு எமக்கு வேண்டும், இப்பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்கள் விபரம், இப்பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் விபரம், ஒழுக்காற்றுக் குழு மன்றங்கள், பரிசுபெறும் மாணவர்களின் விபரம், அன்பளிப்புகள் வழங்கியோர் விபரம் ஆகிய 30 விடயதானங்களை உள்ளடக்கி இம்மலர் வெளிவந்துள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 15120).

ஏனைய பதிவுகள்

Courtroom Sportsbooks

Blogs Higher 5 Gambling enterprise – Score 100 percent free SCs for $dos Live specialist video game Do you know the wagering standards to the