15274 யாழ்/இணுவில் மத்திய கல்லூரி: பவளவிழா மலர் 1930-2005.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: இணுவில் மத்திய கல்லூரி, இணுவில், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).

xii, (6), 174 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×21 சமீ.

யாழ்ப்பாணம் இணுவில் மத்திய கல்லூரியின்; பவளவிழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஆசியுரைகள், வாழ்த்துரைகள், பாடசாலை அறிக்கைகள், பாடசாலை வரலாறு பற்றிய கட்டுரை, மற்றும் ஆசிரியர், மாணவர்களின் ஆக்கங்கள் என்பனவற்றுடன் சபா.ஜெயராசா (தஞ்சை நால்வர் மறுவாசிப்பு), மா.சின்னத்தம்பி (பாடசாலையும் தொழில் நிறுவனங்களும்), செல்லையா கிருஷ்ணராஜா (கந்தரோடையிற் கிடைத்த பிராமிச் சாசனங்கள்), கோகிலா மகேந்திரன் (உன்னத ஆளுமையாளர்கள்), த.சிவகுமாரன் (கற்றலில் இடர்ப்படும் மாணவர்), இ.இரவீந்திரநாதன் (விஞ்ஞானம்), மு.திருஞானசம்பந்தபிள்ளை (திருமூலர் திருமந்திரம் உணர்த்தும் உண்மை), குமாரசாமி சண்முகநாதன் (மனிதவள விருத்திக் கண்ணோட்டத்தில் குடியுரிமைக் கல்வி), பா.தனபாலன் (பாடசாலைகளைப் பண்பட்ட மானுடவியல் பூங்காக்களாக மலர்வித்தல்), அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி (உசாத்துணைச் சேவை), செல்வி வி.கந்தையா (மெல்லக் கற்போரும் ஆசிரியப் பணியும்), பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் (பணியால் மலரும் பவளவிழா- கவிதை), செல்லப்பா நடராசா (மனிதநேயப் பண்பாடுகள் நிறைந்த யாழ்ப்பாணத்துக் குருகுலக் கல்வி), இ.துரை எங்கரசு (அந்த நாள் எந்நாளுமாகியே- சிறுகதை), பண்டிதை திருமதி த.மகாலிங்கம் (இணுவை விளக்கு- கவிதை), க.குமாரசாமி (ஊரும் உறவும்), பூமணி சின்னத்தம்பி (யுகங்களின் வழியே சிலிர்ப்பூட்டும் அறிவியல் பயணம்), பதஞ்சலி நவேந்திரன் (வாழ்வளித்த கலைக்கோயில் – என் நினைவுத் தடத்தில்), பா.ஜெயராசா (கல்வியில் மொழி முகாமைத்துவம்), அகிலா இராஜரட்ணம் (பாடசாலைகளில் கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டில் தரமான உள்ளீடுகள்), தமிழி (அழுவதற்கும் ஆசையில்லை சிரிப்பதெப்படி?-கவிதை), மாலினி உலகநாதன் (இசையின் பெருமை), வ.மகேஸ்வரன்(தமிழ் இலக்கியத்தில் இருட்டடிப்பும் மீட்பும்), ஜெ.மயூரதன் (சிறுவர் ஓவியம்-நவீன ஓவியம்: ஒப்பியல் நோக்கு), திருமதி ச.கைலாசநாதன் (மனிதப் பிறவியின் பண்பாட்டுப் பயிருக்கு நல்ல பசளையாகிறது இலக்கியம்), செ.சிவகுமாரன் (திசை காட்டும் சாரணியம்), சுதாத்மிகா சிவகுமார் (வெற்றிகரமாக கணித பாடத்தைக் கற்பித்தல்), கோமளரஞ்சி கந்தவேள் (கவிதை-இயற்கையை விற்று பெற்றுவிட்ட இன்பங்கள்) ஆகிய அறிஞர்களின் ஆக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

ᐈ Cata Algum Game 2000 Acostumado

Content Rodadas infantilidade bônus Guião Online Puerilidade Caças Níqueis Book of Kings Powerplay – RTP 96,46% Opção boas máquinas Caca Niqueis 150 REVISÕES GRATUITAS –