15278 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மரபுரிமை மண்டபம்.

 தில்லைநாதன் கோபிநாத். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

52 பக்கம், வரைபடங்கள், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-52-8.

தலைமுறைகள் கடந்து வாழும் மண்டபம்/ சைவர்களுக்கோர் ஆங்கிலப் பாடசாலை/ தமிழர் தலைநிமிர் மண்டபம்/ மண்டபங் கண்ட மாற்றங்கள்/ கட்டட வரைபடங்கள்/ எம்மன்னை நின்னலம் மறவோம் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 1895 ஒக்டோபர் 2ஆம்திகதிக்குரிய The Hindu Organ    (இந்து சாதனம்) இதழில் வெளியான செய்தியும் அறிக்கையும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. மேலும், பாக்கியநாதன் அகிலன் 2015இல் எழுதிய “காலத்தின் விளிம்பில்” என்ற மரபுரிமைகள் தொடர்பான நூலில் இடம்பெற்றுள்ள “யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டபம்” என்ற கட்டுரையும் பின்னிணைப்பாகத் தரப்பட்டள்ளது. ஆவணவாக்கச் செயற்பாட்டாளரான தி.கோபிநாத் புங்குடுதீவைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். ஈழத்து ஆவணமாக்கச் செயற்பாடுகளில் 2004 முதல் ஈடுபட்டு வருகிறார். நூலக நிறுவனத்தின் தொடக்கம் (2005) முதல் பங்களித்து வரும் இவர் வாழ்க்கை வரலாற்றுக் கலைக்களஞ்சியம், யாழ்ப்பாணப் பத்திரிகைகளை ஆவணப்படுத்துதல், ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்தல் வாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் போன்ற செயற்றிட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். இந்நூல் ஜீவநதி வெளியீட்டுத் தொடரில் 164ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

So weit wie 30 abzüglich Einzahlung 2024

Content Spielautomaten damit Echtgeld Liste: Vor- & Nachteile bei Sonnennächster planet Slots Auszahlungsquote ihr Echtgeld Verbunden Casinos Mehr kostenlose Spielsaal Spiele Zahlungsmethoden and Auszahlungsgeschwindigkeit Nachfolgende