15281 ஸ்கந்தா 120ஆவது ஆண்டு மலர் 2014.

மலர்க் குழு. சுன்னாகம்: யாழ்/ ஸ்கந்தவரோதயா கல்லூரி, கந்தரோடை, 1வது பதிப்பு, ஜீலை 2014. (யாழ்ப்பாணம்: நியு பாரதி பிரின்டர்ஸ், அளவெட்டி தெற்கு).

xxxii> 146+68  பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

ஆசியுரைகள், வாழ்த்துரைகள், பாடசாலையின் வரலாறு, அறிஞர் அறிவுரைகள், மாணவர்களின் படைப்புகள் என்பவற்றோடு வெளிவந்துள்ள இம்மலரில் மகாத்மா காந்தியின் உரை, ஸ்தாபகர் நினைவுரை 1965, மனிதருள் தேவர், மறைந்த மணிமருந்து, பகையிலாப் பண்பன், பாடசாலைகள் என்ன செய்யவேண்டும், வாண்மையாக ஆசிரியம், கல்வியும் சமூகப் பொருத்தப்பாடும், சங்க இலக்கியங்கள் காட்டும் திருமால், எதிர்கால சந்ததியினருக்கு ஓர் எச்சரிக்கை, கல்வியின் சிறப்பு, அன்பு தன்னில் தழைத்திடும் வையகம், பாடசாலைச் செயற்பாடுகளில் சமூகத்தின் பங்கு, எங்களுக்காகச் சில நிமிடங்கள், பாடசாலை முகாமைத்துவச் செயற்பாடுகளும் அண்மைக்காலப் போக்கும், மனிதன் போதைக்காகப் பயன்படுத்தும் பொருட்களும் அவை உடலில் ஏற்படுத்தும் தாக்கங்களும், பாடசாலைக் கல்வியில் பெற்றோரின் பங்கு, விளைவு பெறும் முறைகளை அறிவோம், அபாயத்தை விளைவிக்கும் மின்காந்தக் கதிர்ப்பு, பிள்ளையின் ஆளுமை விருத்தியில் ஆசிரியரின் மொழிநுட்பம், எங்கள் அதிபர் ஒரேற்றர், ஆயிரம் பிறைகண்ட அதிபர் ஒரேற்றர், ஸ்கந்தாவின் சிற்பி ஒரேற்றர், போற்றி செய்வோம் எங்கள் கல்லூரித் தாயை, ஸ்கந்தவரோதய எங்கள் கல்லூரி, உறுதிமொழி, நான் அதிபரானால், கவித்துளிகள், தோல்விகளைத் தோற்கடிப்போம், கருவிகளும் பயன்பாடும், ஸ்கந்தன் துணை, அதிபர் அறிக்கை 2014 ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இம்மலர் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரியிலிருந்து 1894இல் அதன் உருவாக்கத்தின் 120ஆவது ஆண்டு நினைவாக 05.07.2014 அன்று வெளிவந்துள்ளது.

370.15 கல்வி உளவியல்

மேலும் பார்க்க: இயல்பு மீறிய குழந்தைகள். 15245

372      பாலர் கல்வி

ஏனைய பதிவுகள்