இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம். நுகேகொட: இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், நாவல, பதிப்பு ஆண்டு விபரம் தரப்படவில்லை. (நுகேகொட: திறந்த பல்கலைக்கழகப் பதிப்பகம், நாவல்).
(4), 116 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20 சமீ.
1978இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நெறிகள் பற்றிய பரீட்சார்த்தப் பிரதியாக வெளியிடப்பட்ட நூல். இதில் விஞ்ஞானமாணிப் பாடநெறி மட்டம் -3, துண்டம் 2, (SSU1199) இற்கான ஒன்பதாவது பாடநெறிமுதல் 15ஆவது பாடநெறி வரையிலான விளக்கம் தரப்பட்டுள்ளன. அவ்வகையில் சுதந்திரமடைய முன்பு இலங்கையின் பொருளாதாரம், சுதந்திரத்தின் பின் தோட்டத்துறையின் பொருளாதாரக் கொள்கைகள், சுதந்திரத்தின் பின் பொருளாதாரக் கொள்கைகள்-வாழ்க்கைப்படி பிரிவு, சோல்பரி சீர்திருத்தங்கள், 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசின் அரசியல் யாப்பு, 1978 ஆம் ஆண்டின் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடிரசின் அரசியல் யாப்பு, சர்வசன வாக்கெடுப்பு-நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர். தேர்தல் தொகுதி முறை ஆகிய பாடத்திட்டங்கள் இந்நூலில் மாணவர்களுக்காக விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38602).