15284 மூலதனம் மற்றும் பணச்சந்தை.

நடராசா இராஜேஸ்வரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 99 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-728-8.

மூலதனம் மற்றும் பணச்சந்தை ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அடிநாதமாகும். இது தொடர்பான அறிவு சகலருக்கும் மிக முக்கியமானதாகும். எனினும், தமிழில் இது தொடர்பான நூல்கள் மிக அரிது. இந்நிலையில் இந்நூல் தமிழில் வெளிவருவது இன்றியமையாததாகும். இந்நூலானது நிதி நிறுவனங்கள் மற்றும் பங்குச் சந்தையைப் பற்றி, நிதி நிறுவனங்களும் இடைத் தரகர்களும், நிதிச் சந்தை, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை, நிதிச் சந்தை பகுப்பாய்விற்கான கோட்பாடுகளும் எண்ணக்கருக்களும் ஆகிய  நான்கு அத்தியாயங்களினூடாக விபரிக்கின்றது. நூலாசிரியர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கல்விகற்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வணிகமாணி சிறப்பு இளமாணிப்பட்டத்தினை பெற்றவர். இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் கணக்கியலில் உயர் தேசிய டிப்ளோமாவினையும் பெற்றவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார்.

ஏனைய பதிவுகள்

Neteller Casinos

Articles Visit our website – Simple tips to Claim No deposit Bonuses Find the best The fresh Gambling enterprise Sites In the uk For 2024