15293 வளம் மிக்க வழக்காற்றியல்: ஆய்வுக் கட்டுரைகள் (Documenting Rich Folk Culture)

இராசையா மகேஸ்வரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 87 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-659-589-5.

இந்நூலில் இலங்கையில் இந்தியத் தமிழர்நாட்டார் வழக்காற்றியல் தொன்மையும் இன்றைய நிலையும், இலங்கை வரலாற்றில் பெண்தெய்வ வழிபாடும் தமிழர் பண்பாட்டில் அதன் செல்நெறியும், நவீன ஊடகத்தில் நாட்டுப்புறக் கலைகள், ஈழத் தமிழர்களின் நாட்டுப்புற விளையாட்டுகள், இலங்கையில் மலையகத் தமிழரின் நாட்டுப்புற மருத்துவம், சங்ககால இலக்கியத்தில் தற்கால விளையாட்டுக்கள் ஆவணப்படுத்தலுக்கான ஓர் ஒப்பீட்டாய்வு, தைப்பொங்கல் வழக்காற்றியல், கண்டி எசல பெரஹரவும் உபயோகத்திலுள்ள தமிழ்ச் சொற்பதங்களும்-ஓர் ஆய்வுக் கண்ணோட்டம், கண்டி எசல பெரஹரவும் நான்கு தேவாலயங்களுக்கும் இடையிலான தொடர்புகள் ஆகிய தலைப்புகளில் ஆய்வுரீதியில் எழுதப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பேராதனை பல்கலைக்கழக பதில் நூலகராகப் பணியாற்றும் நூலாசிரியர், கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் சிறப்புப் பட்டதாரி.

ஏனைய பதிவுகள்

Recenzii Cazinouri Online Romania

Content Disponibilitatea Aplicațiilor Să Cazino Pentru Jucătorii Germani Cân De Faci Rulajul Unui Bonus De Cazino Online? Jocurile Ş Norocire Spre România Informații Asupra Jocuri