15295 இலங்கைத் தமிழ் நாட்டார் கதைகள்: வரலாற்று நிலைப்பட்ட கதைகளின் தொகுதி.

சின்னத்தம்பி சந்திரசேகரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 102 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14  சமீ., ISBN: 978-955-659-680-9.

கோயில் சார்ந்த கதைகள், ஊர்கள்-ஊர்ச் சம்பவங்கள், தனிமனிதர் பற்றிய கதைகள் ஆகிய மூன்று பிரிவுகளில் இலங்கைத் தமிழ் நாட்டார் கதைகள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கிராமியப் பண்பாட்டையும் கிராமிய வாழ்க்கை முறைகளையும் மிகுதியாகக் கொண்டிருக்கும் எமது மக்களின் வரலாற்றை மேலடுக்கு மக்களால் உருவாக்கப்பட்ட எழுத்துநிலை ஆவணங்களால் மட்டும் எழுத முடியாது. அவர்களின் சமூக வரலாற்றை எழுதுவதற்கு நாட்டார் வழக்காறுகளும் அவர்களது சமூக நினைவுகளுமே அடிப்படை ஆவணங்களாக அமையமுடியும். அந்த வகையில் இலங்கைத் தமிழர்களின் சமூக வரலாற்றை எழுதுவதற்கான வாய்மொழி ஆவணங்களின் ஒரு சிறு பகுதியின் தொகுதியாக இந்நூல் அமைகின்றது. சி.சந்திரசேகரம் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவராகப் பணியாற்றுபவர் ‘மொழிதல்” ஆய்விதழின் ஆசிரியர்களில் ஒருவராகவும் விளங்குகின்றார்.

ஏனைய பதிவுகள்

Poker Online Dado Apontar 888poker

Content E Funciona Esta Estratégia? Que Funciona An ardil Martingale? Dica 4: Jogue Poker A dilatado Alçada Melhores Sites De Casino Acimade Brazil Briga Poker