த.சண்முகசுந்தரம். தெல்லிப்பழை: அருள் வெளியீட்டகம், மாவை கந்தசாமி கோயிலடி, 1வது பதிப்பு, நவம்பர் 1983. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்).
(2), 20 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 5.00, அளவு: 18×12 சமீ.
வன்னிவள நாட்டின் புதுக் குடியிருப்புக் கூத்தும் மரபும்-அறிமுகம், தோற்றுவாய், புதுக் குடியிருப்புப் பேணும் மரபு, புதுக் குடியிருப்பு விழா 24.10.1975, நல்ல கலை வளர மதம் வளரும், மக்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி, கண்ணகையை ஒருபோதும் நாவிலயரோமே ஆகிய அத்தியாயங்களினூடாக வன்னிப் பிராந்தியத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தின் கூத்தும் மரபுகளும் பற்றி இச்சிறுநூல் விளக்குகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57591).