15316 சிங்கள தலைப்புச் சொற்களுடன் முழுமையான பிரயோக மும்மொழி அகராதி.

ஆலோசனைக் குழு. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

857 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ., ISBN: 978-955-9180-40-1.

அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் பிரசுரிக்கப்படும் இப்பிரயோக சிங்கள-தமிழ்-ஆங்கில மும்மொழி அகராதியானது சிங்கள அரிச்சுவடியிலுள்ள எல்லா எழுத்துக்களையும் ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட முதலாவது பிரயோக மும்மொழி அகராதியாகும். இந்த அகராதியானது சிங்களம்-தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகள் தொடர்பில் முயற்சியில் ஈடுபடும் அனைவரின் மொழித்திறனை விருத்தியடையச் செய்யும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சிங்கள மொழியில் காணக்கூடிய பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள், பெயரடைச் சொற்கள், வினையடைச் சொற்கள் போன்ற பேச்சு மற்றும் எழுத்து சம்பிரதாயத்தில் காணப்படுகின்ற பலவிதமான மொழிப் பிரயோகங்கள் உள்ளடக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Bewertungen

Content Ein umwerfender Beitrag: Herunterladen (Geschäft) Zusätzliche Provider within das Nachbarschaft Zusendung wird direkt & die bruchstückhaft… Neueste Bewertungen Erste Order top, nachfolgende zweite das

12900 – எங்கள் குருநாதன் திருவாசக சுவாமிகள்.

முருக.வே.பரமநாதன் (புனைபெயர்: ஆழ்கடலான்). களுபோவிலை: தெகிவளை திருவாசகம் சுவாமிகள் தொண்டர் சபை, 11/6, ரூபன் பீரிஸ் மாவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 1994. (கொழும்பு 13: இலட்சுமி அச்சகம் இணை பதிப்பாளர், வீமாஸ் அச்சகம்).