15317 தமிழில் சிங்களமொழிப் பயிற்சி.

 சிவகுருநாதன் ஸ்ரீகாந்த. கொழும்பு 11: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேனா அன் கொம்பெனி, 217, ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1955. (கொழும்பு 11: எம்.டி.குணசேனா அன் கொம்பெனி).

v, 59 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

சிங்கள மொழி “அமிஸ்ர சிங்கள” “மிஸ்ர சிங்கள” என இருவகைப்படும். இப்பொழுது வழக்கிலிருப்பது மிஸ்ர (கலப்பு) சிங்களமாகும். மிஸ்ர சிங்கள அகரவரிசையில் 54 முதல் எழுத்துக்களும் அமிஸ்ர சிங்கள (கலப்பற்ற) அகரவரிசையில் 32 முதலெழுத்துக்களும் உள்ளன. மிஸ்ர சிங்களத்தில் பிறமொழிக் கலப்பு அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நூலைப் படிக்கும்போது உச்சரிப்பு விதியையும் தொனி பேதத்தையும் அறிந்து கொள்வதற்கு ஆதாரமாக எழுத்துக்கள்- சொற்களுடன் சேர்க்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்துக்கள் உதவுகின்றன. மேலும் சிங்கள எழுத்துக்கள்-சொற்களை அப்படியே தமிழ் உச்சரிப்பில் ஆசிரியர் தந்துள்ளார். அவற்றிற்குச் சமமான தமிழ்ப் பொருளும் தரப்பட்டிருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25553).

ஏனைய பதிவுகள்

12438 – வெளி: நான்காவது ஆண்டு மலர் 2004.

த.சேரலாதன் (இதழாசிரியர்). மட்டக்களப்பு:மாணவர் அவை, கலை பண்பாட்டுப் பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், 1வதுபதிப்பு, 2004. (மட்டக்களப்பு: வனசிங்கா பிரிண்டர்ஸ், திருமலை வீதி). ix, 117 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20 சமீ.