15320 தமிழ் எழுத்து வரிவடிவங்களின் எதிர்காலம்.

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்), திருமதி பி.ப.செல்வராஜகோபால் (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario,1வது பதிப்பு, 2006. (கனடா: றீ கொப்பி, தொரன்ரோ).

28 பக்கம், விளக்கப் படங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

ஒரு சிந்தனைக் கண்ணோட்டமாக எழுதப்பட்டுள்ள இந்நூலின் வழியாக ஆசிரியர் தமிழறிஞர்களுக்கு தமிழ் எழுத்து வரிவடிவ  மாற்றம் தொடர்பாக வேணடுகோளொன்றினை விடுகிறார். இந்நூல் வெளியீட்டின் பின்புலத்தில் இருக்கும் ‘தமிழ் எழுத்து வரிவடிவ ஒருமைப்பாட்டு இயக்கத்தின்’ உறுப்பினர்களாக அன்புமணி இரா.நாகலிங்கம், செல்வி க. தங்கேஸ்வரி, திரு. பெ.விஜயரெத்தினம், முனைவர் எம். இளங்கோவன், திரு பி.எஸ்.கனகசபாபதி, திரு. அஜந்தா ஞானமுத்து, திரு. சத்தியநாராயணா, திரு இ.தங்கராஜா ஆகியோர் உள்ளனர். தமிழ் எழுத்து வடிவங்களில் ஏற்பட்டு வந்துள்ள வரிவடிவ மாற்றங்களுந் தோற்றங்களும், தமிழ் உயிர் எழுத்துக்களினதும் அவற்றின் வரிவடிவங்களினதும் முரண்பாடுகளை அகற்றிச் சீரமைத்து ஒருங்கமைத்தல், எகர-ஏகார-ஐகார-ஒகர-ஓகார-ஒளகார உயிர் ஒலிக்குறி அடையாள வரி வடிவங்களையும் ஒருங்கமைத்தல், உயிர் ஒலிக் குறியீடுகளை ஒருங்கமைத்தலும் அவற்றின் தொகை ஒவ்வொரு மெய்யெழுத்துக்கும் ஒன்றுக்கு மேற்படாதிருக்கும் அளவுக்கு மட்டுப்படுத்தலும், மெய்யெழுத்துகளில் உள்ள முரண்களை அகற்றுதல், தமிழ் இலக்கண நூல்களும் தமிழ் எழுத்து வரிவடிவ மாற்றங்களுக்கான விதி விலக்குகளும் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3843). 

ஏனைய பதிவுகள்

Amuser un brin gratuite

Ravi Evolve Salle de jeu | Casino action Pas de bonus de dépôt Prince Ali Salle de jeu Puis-je mettre le divertissement du trêve ?