15321 தமிழில் தரிப்புக் குறிகள்.

சி.சிவசேகரம். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 202,340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

(6), 49 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9396-83-3.

முழுத்தரிப்பு முதலாகத் தமிழிற் பயன்படும் தரிப்புக் குறிகளது முறையான பாவனைக்கான கையேடு. தமிழ் இலக்கணத்தில் வசனத்தின் கருத்தை நன்கு புலப்படுத்துவதால், தரிப்புக் குறிகளுக்குத் தனிச் சிறப்பண்டு. 1994இல் தமிழில் தரிப்புக் குறிகளின் பயன்பாடு என்ற நூலையும் முன்னதாக எழுதியவர். தமிழில் தரிப்புக்குறிகள் சமகாலத்தின் இலக்கிய எழுத்துக்களின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டே உதாரணங்களின் மூலம் இதனை விளக்கியிருக்கிறார். தரிப்புக்குறிகளான முழுத்தரிப்பு, வினாக்குறி, விளிப்புக்குறி அல்லது வியப்புக்குறி, குறுந்தரிப்பு, நெடுந்தரிப்பு, விளக்கக்குறி, மேற்கோட்குறிகள், தகிமேற்கோட்குறிகள், சொல்நீக்கக் குறி (முற்றுப்புள்ளி), இணைகோடு, நீள்கீறு, சாய்கோடு, அடைப்புக்குறிகள், அழுத்தம் இடைவெளிகள், பயனுள்ள பிறகுறிகள், பொது விதி ஒன்று ஆகிய குறிகளை உதாரணங்களின் மூலம் சொற் சுருக்கமாகவும் பொருள் விரிவாகவும் எளிய தமிழ் உரைநடையில் இந்நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Wettbonus Ohne Einzahlung

Content Traktandum 9 Verbunden Spielbank Maklercourtage Exklusive Einzahlung 2022 Deutschland 2022 Freispiele Exklusive Einzahlung Pro Reguläre Spieler Allgemeine Geschäftsbedingungen Ihr Boni As part of Der