15323 மட்டக்களப்புச் சொல்நூல்.

ஈழத்துப் பூராடனார், திருமதி பி.ப.செல்வராசகோபால் (இணைஆசிரியர்கள்), செ.இதயசோதி பென்சமீன் (பதிப்பாசிரியர்). களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், தோற்றாத்தீவு-2, 1வது பதிப்பு, 1984. (களுவாஞ்சிக்குடி: செ.இதயசோதி பெஞ்சமின், மனோகரா அச்சகம், தோற்றாத்தீவு).

xxi, 34 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 21.5×14.5 சமீ.

‘மட்டக்களப்புப் பிரதேசச் சொற்களுக்கு எழுத்துருக் கொடுக்கும் முயற்சி இது. இலக்கண அமைதிக்குப் புறத்தே இப்பேச்சு வழக்கு இழிசனர் வழக்கெனும் வேலியால் தடைப்பட்டிருக்கும் நிலை சரியானதா என்பதை நம் வாசகர்கள் தீர்மானிக்கவேண்டிய நிலையொன்று இப்போது உருவாகியுள்ளது. இவை மேலும் புறத்தே நின்று தவிப்பதா அல்லது அகத்தே வந்து ஆறுதலடைவதா என்பது இப்போது நிர்மாணிக்கப்படவேண்டிய விசயமாகும்.’ (பதிப்பாளர் உரையில் செ.இ.பென்சமீன்). இது ஜீவா பதிப்பகத்தின் 62ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1021). 

ஏனைய பதிவுகள்

17251 உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல.

கலாநிதி ஜீவகுமாரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 128 பக்கம், விலை: ரூபா