15325 யாழ்ப்பாண வழக்குச் சொல் அகராதி: தமிழ்-தமிழ் தொகுதி 1.

நடராசா சிறிரஞ்சன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxxiii, 239 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 1250., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-659-653-3.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சொற்களுக்கென வெளிவரும் இவ்வகராதி ‘அ’ முதல் ‘ச’ வரையிலான 3676 வழக்குச் சொற்களுக்கு போதிய விளக்கத்தினை வழங்குகின்றது. இவ்வகராதிப் பணியில் ஆசிரியரை அமரர் பேராசிரியர் சு.சுசீந்திரராஜா நெறிப்படுத்தி வழிகாட்டியிருந்தார். கொடூரமான உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெர்ந்து கொழும்பிலும், புலம்பெயர் நாடுகளிலும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பெருந்தொகையான யாழ்ப்பாணத் தமிழர்கள், தங்கள் இளமைக்கால இனிய வாழ்க்கையையும் தமக்கே உரித்தான பண்பாட்டம்சங்களையும் போலவே தமக்கே உரிய வாலாயமான மொழியையும் தொலைத்து வருவதாக உணரும் இவ்வேளையில் இவ்வகராதியின் வருகை முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் முறையாகத் தொடங்கப்பட்ட இவ்வகராதி முயற்சி, 2017 ஆனி மாதத்தில் இறுதிப்படுத்தப்பட்டது. ஆசிரியரின் இப்பணிக்கு இளைப்பாறிய அதிபர் ஆ.சபாரத்தினம், திரு மயூரநாதன் ஆகியோர் உதவியிருந்தனர். யாழ்;பாணப் பல்கலைக்கழகத்தில் 11.12.2019 அன்று வெளியிடப்பட்டிருந்தது. 

ஏனைய பதிவுகள்

Maryland Web based casinos

Blogs Casino Costa Bingo no deposit bonus – Draftkings Casino Ideas on how to Allege A free of charge Spins Bonus Is actually Gambling enterprise