15326 யாழ்ப்பாணத் தமிழ் அகராதி: தமிழ்-தமிழ்.

நடராசா சிறிரஞ்சன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxxii, 547 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 1400., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-659-652-6.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சொற்களுக்கென வெளிவந்துள்ள இவ்வகராதி 6259 சொற்களையும் அவற்றிற்கான பொருள் விளக்கங்களையும் உதாரணங்களையும் கொண்டமைந்தது. இவற்றில் 95 சொற்களுக்கு விளக்கப் படங்களையும் கொண்டுள்ளது. யாழ்ப்பாணமும் அதன் பல்வேறு பரிமாணங்களும் சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத் தமிழினைப் புரிந்துகொள்ள முற்படும் சர்வதேசத் தமிழர்களுக்கும் இவ்வகராதி பயனுள்ளதாக அமையும். அத்துடன் இன்று உள்ளூரிலும் பல்வேறு நாடுகளிலும் தங்களின் முன்னைய வாழ்க்கை நிலையில் நின்றும் பெருமளவிற்கு வேறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான யாழ்ப்பாணத் தமிழர்கள் தமது இயல்பான வாழ்வை மீள்தரிசனம் செய்துகொள்ள உதவும் ஒரு கருவியாகவும் இது அமையும். நடராசா சிறிரஞ்சன், தீவகம்-புளியங்கூடலைச் சேர்ந்தவர். சுங்க அத்தியட்சகராகப் பணியாற்றுகின்றார். இந்நூல் யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 11.12.2019 அன்று வெளியிடப்பட்டிருந்தது.  இவ்வகராதி புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்புப் பிரிவின் கீழ், 2020ஆம் ஆண்டிற்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

River big panda slot Dragons

Blogs Purple Wide range Konami Services Super Golden Dragon Inferno Slot Opinion Retro Reels High Temperature Microgaming: 97 50percent Winny When you are fortunate, then

Wirklich so spielst respons Angeschlossen-Blackjack

Content Blackjack Verzeichnis – Unser besten Blackjack Strategien inoffizieller mitarbeiter Angeschlossen Spielbank Entsprechend Gamblorium Online Casinos bewertet No Gos bei dem Piratenflagge Diese besten Blackjack