15327 முதலாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு 2020: வரலாற்றுப் போக்கில் தமிழியல் ஆய்வுகள்: ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு.

ம.இரகுநாதன், ஈ.குமரன், க.அருந்தாகரன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜனவரி 2020. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).

xix, 807 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ., ISBN: 978-955-44441-3-3.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2020, ஜனவரி 10,11ஆம் திகதிகளில் இடம்பெற்ற முதலாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின்போது சமர்ப்பிக்கப்பெற்ற  ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இது. இலக்கணம், இலக்கியம், நவீன இலக்கியம், சமயம், கலையும் பண்பாடும், நாட்டாரியல், வரலாறும் ஏனையவையும் ஆகிய ஏழு பிரிவுகளின்கீழ் 91 கட்டுரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. தமிழியல் என்பது தமிழின் அனைத்துத் துறைகளையும் சார்ந்த தன்மையுடையது என்ற வகையில் இவற்றின் ஆய்வுப் பரப்பு, இலக்கணம், இலக்கியம், வரலாறு, தத்துவம், ஒப்பியல், இயற்கையியல், நாட்டாரியல், சமயம், நாடகம், பதிப்பு வரலாறு, நவீன கவிதைகள், மொழிபெயர்ப்பு, சமூகவியல், இதழியல், சோதிடவியல், பெண்ணியம், கல்வியியல், தமிழ் மருத்துவம், திரைப்படவியல், தொல்லியல், சித்தர் மரபு, முதலான பொருண்மைகளைக் கொண்டு விரிந்திருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66029).

ஏனைய பதிவுகள்

22 Ways to get Traffic to your site Prompt

Blogs Superlenny casino review – Quick Hyperlinks Exchange all of the placeholder pictures that have latest photographs and designs. walk background. touching time. Availableness a

12476 – தமிழ்மொழித் தின விழா மலர் 1995.

மலர்க் குழு. கொழும்பு: கொழும்பு தெற்குக் கல்விக் கோட்டம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜுன் 1995. (வத்தளை: வத்தளை பிரின்டர்ஸ், 17/10, நீர்கொழும்பு வீதி). (108) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5