15329 தமிழ்மொழி இலக்கண வழிகாட்டி.

அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ். சுவிட்சர்லாந்து தமிழ்க் கல்விச் சேவை, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).

vi, 120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ., ISBN: 978-3-906871-14-1.

சுவிட்சர்லாந்து தமிழ்க் கல்விச் சேவையினர் அந்நாட்டுத் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் மொழி, தமிழர் வரலாறு, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றை எளிதாகவும் விருப்புடனும் கற்பதற்கு ஏற்றவாறு இந்நூலை வெளியிட்டுள்ளனர். இப்பாடநூல்களில் நான்காம் ஆண்டு நூலிலிருந்து தமிழ் இலக்கணம் பற்றிய பகுதிகள் இடம்பெறுகின்றன. இவை தொடர்பாக மேலதிக விளக்கங்களை கொடுக்கவும், ஒழுங்குபடுத்தப்பட்ட தமிழ் இலக்கணக் கூறுகளையும் பாகுபாடுகளையும் அவற்றுக்கான விளக்கங்களையும் ஒரு கட்டமைப்புக்குள் கொடுக்கவும் தமிழ் இலக்கண வழிகாட்டி என்னும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தமிழ் இலக்கணம், தமிழ் மொழி, எழுத்தியல், சொல்லியல், வாக்கியவியல், பொருளியல், யாப்பியல், அணியியல் ஆகிய எட்டு பாடங்களாக இவை வகுத்துத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

How come Online Bingo Alive Work?

Articles What’s Colour Online game Real time Perya? Comparable games Introduction: The new Evolution of Bingo with Bingo Alive Start by trying to find a