15338 கணிதம் தரம் 10: ஆசிரியர் வழிகாட்டி.

தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: கணிதத் துறை, விஞ்ஞான தொழில்நுட்ப பீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2014. (பத்தரமுல்ல: பிரின்ட் கெயார் அச்சகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுருபாய).

xi, 195 பக்கம், விலை: ரூபா 557., அளவு: 28.5×22 சமீ.

பாடத்திட்டம், பாடத் தொடரொழுங்கு (தேசிய இலக்குகள், தேசிய பொதுத் தேர்ச்சிகள், கணிதம் கற்பித்தலின் நோக்கங்கள், பாட உள்ளடக்கம்), கற்றல்-கற்பித்தல் மதிப்பீடு சம்பந்தமான ஆலோசனைகள் ஆகிய மூன்று பிரதான பிரிவுகளின் கீழ் கணித பாடத்திற்கான ஆசிரிய வழிகாட்டியானது ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்திற்கிணங்க கற்பித்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக மேற்கொள்வதில் ஆசிரியர்களுக்கு வசதிகளை வழங்கும் நோக்கில் இவ்வாசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: கணிதம் கடினமானதா?. 15248

ஏனைய பதிவுகள்

13756 பாழ்வெளி.

உடுவில் அரவிந்தன். யாழ்ப்பாணம்: உடவில் அரவிந்தன், மயிலியதனை, தொண்டைமானாறு, 1வது பதிப்பு, கார்த்திகை 2017. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி). viii, 112 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×13.5 சமீ.,