15340 கட்டிலில் இருந்து அண்டம் வரை.

எஸ்.பீ.ராமச்சந்திரா (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2021, 1வது பதிப்பு, மார்ச் 2015. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xiv, 130 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-5881-14-7.

திருக்கோணமலை, அம்மா பதிப்பகம், (31/1, சமாது ஒழுங்கை) வெளியீடாக வைத்திய கலாநிதி எஸ்.பீ.ராமச்சந்திரா அவர்களால் எழுதப்பட்டு 2015இல் வெளிவந்த நூலின் திருத்திய மீள்பதிப்பு இதுவாகும். இந்நூலில் சூரிய குடும்பத்திலுள்ள கோள்கள் பற்றிய பல்வேறு அறிவியல் தகவல்கள் சிறு குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளன. இலங்கையில் ஏற்படும் நேர மாற்றங்கள், விண்கல் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இந்நூல் விளக்குகின்றது. விஞ்ஞான ஆய்வாளர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் இக்குறிப்புகளில் காணமுடிகின்றது. வானியல், சரிதையியல் பௌதிகவியல், நட்பியல், வாழ்வியல், ஆன்மீகவியல் ஆகிய ஆறு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ‘வானியல்’ என்ற பிரிவில் கட்டிலில் இருந்து அண்டம் வரை, சூரியக் குடும்பம், கலண்டரின் கதை, இந்திய தேசியக் கலண்டர், இலங்கை நேரமாற்றம், விண்கற்கள் ஆகிய ஆறு கட்டுரைகளும், ‘சரிதையியல்’ என்ற பிரிவில் அல்பிரட் நோபெல், வில்ஹெம் கொனராட் ரொண்ட்கென், மேரி கியுரி, தோமஸ் நியுகமென், பெஞ்சமின் பிராங்ளின், அலெக்சாண்டர் கிரஹம்பெல், ரைட் சகோதரர்கள், ஸ்டீபன் ஹோக்கிங் ஆகிய எட்டு கட்டுரைகளும், ‘பௌதிகவியல்’ என்ற பிரிவில் பிரக்ஞையின் நிறமாலை, குவாண்டம் பௌதிகமும் மூப்பும், காட்டு ஊசலின் வேட்டை, பார்வையாளன் பங்காளி, ஒளியின் கதை ஆகிய ஐந்து கட்டுரைகளும், ‘நட்பியல்’ என்ற பிரிவில் தர்மு சிவராம், சித்தி அமரசிங்கம் ஆகிய இரு கட்டுரைகளும், ‘வாழ்வியல்’ என்ற பிரிவில் எனது இளமைக்கால நினைவுகள், இந்திய யாத்திரைப் பயணம், அமெரிக்கப் பயணம் (5 தொடர்கள்) ஆகிய ஏழு கட்டுரைகளும், ‘ஆன்மீகவியல்” என்ற பிரிவில் சமாதான யாத்திரிகை, குருமணியின் பாதங்களில், சிவயோகபுர நடேசர் ஆலயம் ஆகிய மூன்று கட்டுரைகளுமாக மொத்தம் 31 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை அறிவு, விளக்கு ஆகிய பெயர்களில் வெளிவந்த சிறுசஞ்சிகைகளில் எழுதப்பெற்ற ஆக்கங்கள் இவை. இந்நூல் 193ஆவது ஜீவநதி பிரசுரமாக வெளியீடு கண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Funds & Losings P&l

Posts Will cost you Show Shipping | pubg betting odds Fever Versus Wings Prediction, Pro Picks & Wnba Opportunity: Can also be Caitlin Clark &