15346 யாழ்ப்பாண மூலிகைத் தாவரங்கள்: விவரணமும் பயன்களும்-படங்களுடன்.

ஜெயராணி நந்தகுமார். யாழ்ப்பாணம்: திருமதி ஜெயராணி நந்தகுமார், சிரேஷ்ட விரிவுரையாளர், தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2020. (யாழ்ப்பாணம்: யாழ். பதிப்பகம், 311/1, ஆடியபாதம் வீதி, நல்லூர்).

xii, 356 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 3500., அளவு: 32.5×20.5 சமீ., ISBN: 978-624-96345-0-3.

அறிமுகம், மூலிகைத் தாவரங்களின் நிரல், மூலிகைத் தாவரங்களின் விவரணமும் பயன்களும், மூலிகைத் தாவரங்களின் படங்கள், சுட்டி, ஆகிய பிரிவுகளுடன், பின்னிணைப்பாக மூலிகைத் தோட்டம், பூக்காத் தாவரங்கள் ஆகியனவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூலில் மூலிகைத் தாவரங்களின் தாவரவியல் பெயரொழுங்கில் அகரவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் தாவரத்தின் விவரணமும் அதன் பயன்கள் மற்றும் மூலிகைப் பெறுமானங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் தாவரத்தினை இலகுவாக இனம்காணும் நோக்கில் அதே தாவரத்தின் விளக்கமான படமும் கொடுக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் சிறப்புப் பட்டத்தை 1988இல் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைப் பெற்று மூன்று தசாப்தங்களுக்கும் மேல் விரிவுரையாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார். இது இவரது முதலாவது நூலாகும்.

ஏனைய பதிவுகள்

Spinyoo Local casino Personal

Content Promotions And you may Bonuses Luckybud Local casino: a hundred No-deposit Totally free Spins For the Publication Of Pyramids Customer service try integrated so